3/06/2009

பாம்பின்கால் பாம்பறியும்-செய்தி மறு ஆய்வு பாகிஸ்தானில் சிறிலங்கா துடுப்பாட்ட அணியை குறிவைத்தது யார்?


புதினம்- வியாழக்கிழமைஇ 05 மார்ச் 2009இ 06:34 மு.ப ஈழம்ஸ ஜபா.மதியழகன்
-கிழக்கான் ஆதம்-


கடந்த 03ம் திகதி இலங்கை கிரிக்கட் அணி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தோடர்பாக இன்றைய 05இம் திகதிய மார்ச் புதினம் இணையத்தில் பா.மதியழகன் அவர்கள் பாகிஸ்தானில் சிறிலங்கா துடுப்பாட்ட அணியை குறிவைத்தது யார்? என்ற தலைப்பில் ஒருசெய்தி ஆய்வு எழுதியிருந்தார் அதை படிக்கும் போது அது புலிகளின் வேண்டுதலின் பேரிலயே செய்யப் பட்டிருக்கிறது என்ற சந்தேகத்தை வலுப் படுத்துவதாக உள்ளது அதற்கான சாத்தியங்களை அவர் கூறுவதை வைத்தே நோக்குவோமாக
முதலில் பெப்ரவரி மாதம் 12ம் திகதி புதுச்சேரியில் பேசிய சீமான்
“இங்கே நாங்கள் எல்லாம் போர் நிறுத்தம் கோரிப் போராடிக் கொண்டிருக்க இந்தியா கிரிக்கட் அணி அனுப்பியிருக்கிறது விளையாட” என்று நக்கலாகக் கூறி கைதட்டல் வாங்கிக் கொண்டார். (இந்த பேச்சின் தொனி அர்த்தம் வேறு விதமாக இருந்தது-தேவைப்படுவோர் பேச்சை மீண்டும் கேட்டுப் பாருங்கள்) இதன் மூலம் இனிப் போர் நிடித்தால் புலிகளின் கவனம் இலங்கை இந்திய தேசிய விளையாட்டனிகள் மீது திரும்பும் என்பதை சூசகமாகச் சொன்னார். காரணம் இப்படி பல முறை புலிகள் ஒரு தரப்பார் மீது தாக்குதல் நடத்துமுன் அதற்கான சமிங்கையை தங்களின் ஊடகங்கள் மூலமோ அல்லது ஊது குழல்கள் மூலமோ வெளியிடுவது வழக்கம்.
உதாரணத்திற்கு ஜூலை மாதம் 26ம் திகதி 2006ம் ஆண்டு மாவிலாரு மற்றும் மூதூர் மீது புலிகள் தாக்குதல் நடத்துவதற்காக கிழக்கு மாகாணத்தில் மூதூர் மற்றும் கிண்னியா போன்ற பகுதிகளில் இஸ்லாமிய ஜிஹாத் இயக்கம்கள் இயங்குவதாக பல முறை தங்கள் இணையங்கள் மற்றும் ஊடகங்கள் ஊடாக பிரச்சாரம் செய்தனர்.
இதே கருத்தை மட்டகளப்பைப் சேர்ந்த கிரிஸ்த மதபோதகர் ஒருவர் ஊடாக புலிகள் சர்வதேச ஊடகங்களுக்கு சொன்ன போது அதை எதிர்த்து கிழக்கில் முஸ்லீம்கள் ஆர்பாட்டமும் செய்தனர் அதன் பின் அந்த கிரிஸ்தவ மதபோதகர் முஸ்லீம்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார். (இவ்வாறு பல தாக்குதலுக்கு முதலான பிரச்சாரங்களை குறிப்பிட முடியும் விரிவு கருதி தவிர்கிறேன்)
இவ்வாறு செய்வதூடாக தங்கள் தாக்குதலை நியாயப்படுத்த பார்பது புலிகளின் பாணி. அடுத்து நோக்குவமானால் இந்த கட்டுரையாளர் மதியளகனே ஆய்வை இவ்வாறு ஆரம்பிக்கிறார்.
போர் தனித்து களமுனைகளில் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக களமுனை உருவாக்கங்களாலும் நிர்ணயிக்கப்படும் என்பதை லாகூரில் நடைபெற்ற சிறிலங்கா துடுப்பாட்ட அணி மீதான தாக்குதல் வெளிப்படுத்துகின்றது. என்கிறார். இதன் மூலம் அவர் இரண்டு விடயங்களை உலகத்திற்கு சொல்கிறார் ஒன்று- புலிகள் இலங்கையில் தோல்வியடைந்தாலும் ஒழிக்கப் பட்டாலும் வெளிநாடுகளில் இலங்கையை பிரதி பலிக்கும் எவரையும் எங்கள் (பணம்) பலத்தை பாவித்து தாக்குவோம் என்பதும் இரண்டாவது அவ்வாறான தாக்குதல்களை நடத்தும் திறனை புலிகளிம் இருந்து அழிக்க முடியாது என்பதாகும் அதன் அர்த்தம்.
காரணம் அவர் குறிப்பிடுவது போன்று இந்தியப் புலானாய்வுப் பிரிவுக்கு பாக்கிஸ்தான் ஒரு களம் அல்ல இந்தியாவுக்கு பாக்கிஸ்தான் மிகவம் தொல்லை கொடுத்தாலும் அதை ஒரே அடியில் பணியவைக்கும் இராணுவஇ மற்றும் அரசியல் பலம் இந்தியாவுக்கு உண்டு பிராந்திய நலன் சமாதானம் கருதி இந்தியா பொறுமை காக்கிறது என்பதே அரசியல் ஆய்வாளர்களின் இந்தியா பாக்கிஸ்தான் தோடர்பான பார்வையாகும். ஆகவே இந்த வரிகள் புலிகளுக்கும் அவர்களின் தற்போதைய நிலைக்குமே பொருந்தும்.
ஆனால்இ இன்னொரு நாட்டில் சிறிலங்காவை பந்தாகப் பாவிப்பார்கள் என்று யார் எதிர்பார்த்திருப்பார்கள்? நிச்சயமாகஇ இந்தியாவின் வெளியகப் புலனாய்வு அமைப்பான றோ (சுயுறு) வை தவிர பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இந்த வரிக்ளுக்கு கீழே வருபவற்றில் இந்திய உளப்பிரிவே தாக்குதல் நடத்துவதாக சொல்லும் ஆய்வாளர் இதில் முரண்பாடாக உண்மைச் சொல்லியிருக்கிறார். ஆதாவது இந்திய புலானாய்வு அமைப்பான றோ இப்படிப் பட்ட தாக்குதல்களை இறுதியில் புலிகள் செய்வார்கள் என தெரிந்திருந்தது மட்டுமல்லாது இலங்கை அரசை அனுப்ப வேண்டாம் என எச்சரித்துமிருந்தது என்பதே அந்த வரிகள் அர்த்தம்.
இதற்கு முதலும் புலிகள் இதுபோன்றதோரு முறையை கையாண்டிருக்கிறார்கள். சர்வதேச கிரிக்கட்போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது (தென் ஆபிரிக்காவில் என நினைக்கிறேன்) தங்களுக்கு ஆதரவான பெனர்களை ஹெலியில் கட்டி மைதானத்தின் வானத்தில் இழுத்திருந்தனர் இது எல்லோருக்கும் தெரியும்.
மட்டுமல்லாது இப்படிப் பட்ட தாக்குதலை பாக்கிஸ்தானில் வைத்து நடக்கவைப்பதன் மூலம் பாக்கிஸ்தான்-இலங்கைகு இடையிலான உறவைப் பிரிக்கலாம் அதன் மூலமாக இலங்கை இராணுவத்தினருக்கு முக்கிய ஆயுத தளபாட வளங்கள் ஒன்றைத் தடுக்கலாம் என்பதும் அவர்களின் நோக்காகவிருக்கலாம்.
காரணம் வாரத்திற்கு இரண்டு கப்பல்களை இரானுவத்தினருக்கு பாக்கிஸ்தான் வழங்குவதாக புலிகளும்இ அவர்களின் ஆதரவாளர்களும்இ அவர்களின் ஊடகங்களும் அதை நிறுத்த வேண்டும் எனப் பிரச்சாரம் செய்வது உங்களுக்குத் தெரியும்.
ஆனால் இந்தத் திட்டம் பலிக்க வில்லை இலங்கையின் வெளிவிபகார அமைச்சர் உடனே பாக்கிஸ்தான் சென்றது மட்டுமல்லாது இது உறவைப் பாதிக்காது என்றும் அறிவித்திருந்தார்.
மட்டுமல்லாது இந்த தாக்குதிலினுடாக இந்தியாஇ இலங்கைஇ பாக்கிஸ்தான் மூன்றையும் ஒன்றுடன் ஒன்றை அரசியல் ரீதியாக மோதவிட்டு உறவைச் சீர்குலைப்பதன் மூலம் இலங்கை இராணுவத்தின் பலத்தை குறைக்கலாம் என்பதும் நோக்கமாகவிருக்கும்
புடவை வியாபரிகள் போல வேடம் தரித்துஇ மட்டக்களப்பில்இ முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பிரதேசங்களில் உளவுத் தகவல்களை திரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த றோவின் இரு முகவர்கள் ஐ.எஸ்.ஐ முகவர்களால் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான தனது நடவடிக்கைகளை 'றோ' சிறிலங்காவில் இறுக்கமாக்கியிருந்தது. இவ்வாறு யாரோ செய்த கொலைக்கு ஐ.எஸ்.ஐயை சாட்டி விடுவதன் மூலம் தங்கள் நலன்காக்க நினைக்கும் ஆய்வாளர். இலங்கையில் இந்திய றோ புலனாய்வாளர்களுக்கு எதிரானவர்கள் யார் என்பதை நிராஜ் டேவிட் எழுதிஇ அனஸின் குரலினுடாக உண்மைகயின் தரிசனம் என்ற பெயரில் தீபம் தொலைக்காட்சியிலும் மற்றும் இணை​யம்களிலும் எல்லோரும் பார்த்து அறிந்திருக்கஇ முழுப் புசனிக்காயை ஐ.எஸ்.ஐ யால் மறைத்து இந்தியா எடுத்துச் செல்ல முற்பட்டுள்ளார்.
சாமாதான காலத்தில் தமிழ் நாட்டிலிருந்து புலிகளின் அரசியல் தலைவர்களான வை.கோஇ பழ.நேடுமாறன் போன்றவர்களின் அனுசரனையில் தமிழீழத்தை பார்ப்பதாக வந்து புலிகளின் வதிவிடங்கள் இராணுவ நிலைகள் என்பவற்றைப் பற்றி தாங்கள் செய்மதிகளூடாக பெற்றுக் கொண்ட தகவல்களை உறுதிப்படுத்திக் கொண்ட இந்தியாவின் உளவாளிகளைப் பற்றி சொல்ல மறந்து விட்டார்.
இதுவே புலிகளின் இலக்குகளை துள்ளியமாக கண்கானிக்க இந்தியா இலங்கைக்கு உதவியது. இதையே றோ சிறிலங்காவில் தனது நடவடிக்கையை இறுக்கமாக்கியது எனக் கூறுகிறார் போலும்.
பாக்கிஸ்தானிய இலங்கை உயஸ்தானிகர் பஸீர் வலி முஹம்மட் மீது தாக்குதல் நடத்தி இந்திய பிரதமரைக் கொன்றதைப் போல இலங்கை இரானுவத்திற்கு ஆயுத மற்றும் சகல இராணுவ நடவடிக்களுக்கும் மிகப் பலமாக உதவியாக இருக்கும் இவரையும் கொலை செய்ய நடத்தப்பட்டு இத் தாக்குதல் தோல்வியில் முடியவே அதை இந்தியாவின் காதில் சுற்ற முற்பட்டுள்ளார். அதையும் அவரே இவ்வாறு கூறியுள்ளார்இ
பாகிஸ்தானுக்கும் சிறிலங்காவிற்குமான நெருக்கமான உறவின் உயிர்நாடியாக பசீர் வலி முகமட் விளங்கினார். மட்டுமல்லாது அவரை அறியாமலே அவரே புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கு மிகப்பலமாக உதவியர் இவர் எனக் குறிப்பிட்டும் உள்ளார்.
இவ்வாறு நிறையவே மொட்டைக் தலைக்கும் முளங்காலுக்கும் முடிச்சிப் போட்ட இவர் இந்திய கிரிக்கட் அணி இலங்கையில் விளையாடியபோது சிறிய கற்களால் தனது அணியின் தோல்வியை தாங்கிக் கொள்ள திராணியற்ற முட்டாள்களால் மேற்கொள்ளப் பட்ட சம்பவத்தை ஒரு அரசியல் ராஜதந்திர நகர்வாகக் காட்டியிருப்பது அவரின் அரசியல் அறிவையும் ஞானத்தையும் காட்டுகிறது
அத்துடன்இ
இவை அனைத்தையும் தாண்டிய உச்சக் காரணியாகஇ அனைத்துலக மட்டத்தில் பாகிஸ்தானை ஒரு பயங்கரவாத நாடாக வெளிப்படுத்துவதற்குஇ உலகளாவிய ரீதியல் அனுதாபத்தை ஈட்டக்கூடிய ஒரு தாக்குதல் அவசியம் என திட்டமிட்ட 'றோ'இ அதற்கான மிகச்சிறந்த இலக்காக சிறிலங்கா துடுப்பாட்ட அணியை தெரிவு செய்தது.
என்றதன் மூலம் இந்தியா பாகிஸ்தானை சர்வதேசத்தில் பயங்கரவாத நாடாக காட்ட இவ்வாறான தாக்குதல் தேவைப்பட்டதாக தனது வாதத்தை நிறுவ முற்படுகிறார். ஆனால் அவருக்கு இன்னும் தெரியவில்லை
உலகில் பயங்கரவாத்த்தை தூண்டும் மற்றும் பாதுகாப்பு உத்தரவாதமில்லாத நாடு என ஐக்கிய நாடுகள் சபை உற்பட பாகிஸ்தான் இத் தாக்குதலுக்கு முதலே கண்டனத்துக் குள்ளாகியிருப்பதும்இ பயங்கரவாத நாடென்று அறிவிக்கப்பட்டிருப்பதும்
மட்டுமல்லாது பாகிஸ்தானை பயங்கரவாத்தை தூண்டும் நாடனக் காட்ட சிறிநகர் காஸ்மீர்இ மற்றும் மும்பாய் தாக்குதல்களை விடவா இலங்கையும் இத்தாக்குதலும் முக்கியத்துவம் பெறப்போகிறது என்பதும் அவருக்குத் தெரியவில்லை.
இப்படி யாரோ சொல்லிக் கொடுத்ததை தனது ஆதரவாளர்களுக்கு காதில் சுற்றியுள்ள ஆய்வாளர் தங்களின் சுட்சுமத்தை றோ கண்டு பிடித்து விட்டது என்பதை இப்படிச் சொல்லியுள்ளார்.
அதேவேளைஇ இந்தப் பழியையும் புலிகள் மீது போடக்கூடிய கைங்கரியங்களில் 'றோ' ஈடுபடத் தொடங்கிவிட்டது.
இவ்வாறு சொன்னதற்கு மிகப் பலமான காரணம் உள்ளது புலிகள் மிகவும் முட்டாள் தனமாக நடத்திய தாக்குதல்களான ராஜிப் காந்தியினதும்இ முஸ்லீம் மக்கள் மீதானதும்இ மற்றும் அரசியல் தலைவர்கள் மீதானதும் சர்வதேசத்திலும் தனது பொன் முட்டையிடும் வாத்துக்களான புலம் பெயர் ஆதரவாளர்களிடம் கசப்புணர்வை ஏற்படுத்தியிருக்கஇ
மீண்டும் இப்படி முட்டாள் தனமாக தாக்குதல் நடத்தியதாக றோ நிறுவித்து விட்டால் அவர்களும் புலிகளை முற்றாக புறக்கணித்து விட்டால் தின்னுகிற சோற்றுக்கும் மண் விழுந்துவிடும் என்றே உடனே அவர்களின் எண்னவோட்டத்தை தியைதிருப்பியுள்ளார்.
இப்படி பல வழிகளில் சுற்றியுள்ள மதியளகன்இ எழுதியுள்ள முடிவுரைக்கு ஒரு ஓ. போடலாம்.
காரணம் பாகிஸ்தானுக்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான உறவில் இந்தியாவுக்கு எந்தப் பாதிப்பும் வரப்போவதில்லை (பாகிஸ்தானால் இந்தியாவை ஒன்றும் செய்ய முடியாது என்பது வேறு விடயம்) அப்படி இந்தியா விரும்பாமல் இருந்தால் ஒரே வார்தையில் இலங்கையிடம் சொன்னால் இலங்கை அடுத்த கணம் பாகிஸ்தானை நீ யார் எனக் கேட்கும் என்பது எல்லோருக்கும் தெரியும்.
காரணம் இலங்கை என்பது இந்தியாவின் பிள்ளை அதன் மீதான சகல் அதிகாரமும் இந்தியாவுக்குத்தான் இதை புலிகளின் ஊடகங்களே இந்திய காங்கிரஸ் ஆட்சியாளர்களின் பொம்மை இலங்கை அரசு என விமர்சித்து வருகின்றனர் காட்டுனில் கீறி தனது இணையத்தளங்களிலும் வெளியிட்டுள்ளனர். மட்டுமல்லாது இந்தியாஇ பாகிஸ்தான்இ இலங்கை இணைந்தே புலிகளுக்கெதிராக யுத்தம் புரிவதாக அவர்களின் ஆதரவாளர்கள் கூட ஆர்பாட்டங்களில் சொல்கிறார்கள்.
எனவே இலங்கை பாகிஸ்தான் உறவை விரும்பாதது இந்தியா இல்லை என்பது புலிகளினதும் அவர்களின் ஆதரவாளர்களினதும் மற்றும் அனைத் துலகத்தினாரினதும் கருத்து.
அப்படியானால் இவரது முடிவுரை யாரைக் குற்றம் சாட்டுகிறது என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.
இதோ அவரது முடிவுரை:
“பாகிஸ்தானுக்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான பிணைப்பை விரும்பாத எதிரிகளே லாகூர் தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக பாகிஸ்தான் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.
அவதானங்களை கோர்வையாக்குகின்ற வாசகர்களுக்கு லாகூர் தாக்குதலின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது தற்போது தெளிவாக புரிந்திருக்கும்.”




0 commentaires :

Post a Comment