இந்தோனேஷியாவில் அணை ஒன்று உடைந்து அதிலிருந்து தண்ணீர் சீறிப் பாய்ந்து சென்றதில் 50 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கான வீடுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.
இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவுக்கு அருகே பழமையான அணை ஒன்று உள்ளது. இப் பகுதியில் இடைவிடாத அடைமழை பெய்ததைத் தொடர்ந்து அந்த அணை உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 2 மணி அளவில் திடீரென உடைந்து அதிலிருந்த தண்ணீர் 3 மீட்டர் உயரத்துக்கும் கூடுதலாக அருகாமையில் இருந்த குடியிருப்புப் பகுதிகளில் சீறிப் பாய்ந்தது.
இதனால் அங்கிருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. அத்துடன் ஏராளமான வீடுகளும், கட்டிடங்க ளும் தண்ணீரில் மூழ்கின.
இதில் 50 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 100க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பலரை காணவில்லை என்பதாலும் ஏராள மான வீடுகள் தண்ணீரில் மூழ்கி இருப்பதாலும் சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. அணைக்கு அருகில் உள்ள பகுதி எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிப் பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாய்ந்தோடும் வெள்ளத்தில் உயிரிழந்த மனிதர்களின் உடல்களும் வீடுகளிலிருந்து அடி த்து வரப்பட்ட மேசை, நாற்காலிகள் மற்றும் இதர பொருட்களும் மிதந்தன. மீட்புக்குழுவி னர் படகுகளில் சென்று முழு வீச்சில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இதேவேளை பாதிக்கப்பட்ட மக்களின் சுகா தார வசதியைக் கவனிக்க சகாதார அமைச்சு நட வடிக்கை மேற்கொண்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 commentaires :
Post a Comment