முல்லைத்தீவில் காயமடைந்த பொதுமக்களில் 282 பேர் நேற்று சனிக்கிழமை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் கப்பல் மூலம் திருகோணமலைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். நேற்று சனிக்கிழமை மாலை கப்பல் மூலம் திருகோணமலைக்கு அழைத்துவரப்பட்ட இவர்களுக்கு உடனடியாக அங்குள்ள மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டது.
இதனையடுத்து இவர்களில் பலரை வவுனியா, மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பெப்ரவரி மாதத்திலிருந்து இதுவரை முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் யுத்த நடவடிக்கைகள் காரணமாக காயமடைந்த பொதுமக்கள் கப்பல் ஊடாக ஆறாவது தடவையாக அழைத்து வரப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
0 commentaires :
Post a Comment