2/22/2009

கிழக்கு முதல்வர் தலமையில் தேசிய நெல் அறுவடை விழா.


கிழக்கு மாகாணம் இன்று புதிப்பொலிவு பெற்று வருகின்றது. இச் சந்தர்ப்பத்திலே கிழக்கு மாகாண சபையினது தோற்றம் மற்றும் அதன் இயக்கம் காரணமாக கிழக்கு மக்கள் ஓரளவு அபிவிருத்தியினை எட்டிவருகின்றார்கள். இதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தனின் அயராத உழைப்பும் அவரின் விவேகமான செயற்பாடுகளும் உறுதுணையாக இருப்பதனைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதற்கு சிறந்த எடுத்துக் காட்டு இன்று முதன்முதலாக கிழக்கு மாகாணத்திலே தேசிய நெல் அறுவடை விழா வெகுவிமர்சையாக பன்குடாவெளியில் கொண்டாடப்பட்டது.இதற்கு சிறப்பு அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும் கொளரவ ஜனாதிபதியின் ஆலோசகருமான பசில் ராஜபக்ஸ அவர்கள் கலந்து கொண்டார். மேலும் கிழக்கு மாகாண ஆளுணர், கிழக்கு மாகாண அமைச்சர்களான சுகாதார அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், வீதி அபிவிருத்தி அமைச்சர் உதுமாலெவ்வே, விவசாய அமைச்சர் து. நவரெட்ணராஜா , மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர், மற்றும் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

0 commentaires :

Post a Comment