2/27/2009

தமிழர் விடுதலைக் கூட்டணியின் அறிக்கை.






பத்திரிக்கை செயதி
இனந்தெரியாத ஆயுததாரிகளால் யாழ்பாணத்திலும் கொழும்பிலும் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் சம்பந்தமாக அவர்களின் உறவினர்கள் மூலமாக எமக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் கௌரவ வீ. ஆனந்தசங்கரி அவர்களின் பணிப்பின் பேரில், அவரின் செயலாளர் திரு. இரா. சங்கையா அவர்களின் தலைமையில் கடந்த ஒரு மாதகாலமாக எமது குழுவினர் சில இடங்களை பார்வையிட்டுள்ளனர். அதன்படி சில தகவல்களும் பெறப்பட்டுள்ளன. அதனடிப்படையில் கடந்த 20..02.2009ம் திகதி பயங்கரவாத தடுப்புப் பிரிவில் தடுத்துவைக்கப்பட்டு பூசா சிறையில் உள்ளவர்களையும் பார்வையிட்டு விபரங்களை சேகரித்து வந்துள்ளனர்.
பூசாவில் உள்ளவர்களில் குறிப்பாகப் பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்டவர்களாகவே காணப்படுகின்றனர். ஒருசில வயதான தாய்மார்கள் கைக்குழந்தையுடன் இருக்கும் பெண்கள் நிறைமாத கர்ப்பிணிப் பெண்கள் போன்றவர்களின் நிலை பரிதாபகரமானதாகவே காணப்படுகின்றது. இவ்வாறானவர்களின் விசாரனையை துரிதமாக முடித்து அவர்களை விடுதலை செய்வதற்காக சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்து நடவடிக்கைகளை மேற்nகொள்ளவேண்டுமென எமது குழுவினர் தலைவர் வீ. ஆனந்தசங்கரி அவர்களை கேட்டுக்கொண்டனர்.
அத்துடன் பூசாவில் அடைக்கப்பட்டுள்ள ஆண்கள் அனைவரும் அரசியல் தலைவர்கள் மீது ஆத்திரத்துடனும் வெறுப்புடனும் உள்ளனர். அடிக்கடி பூசாவிற்கு செல்லும் அரசியல்வாதிகள் அவர்களைப் பார்த்துவிட்டு பத்திரிக்கைகளுக்கு வெறும் அறிக்கைகளைமட்டும் கொடுத்துவிட்டு தமது கடமை முடிந்தவிட்டதாக நினைத்துக்கொண்டு செயற்படுவதாகவும் தங்களின் விடுதலையைப்பற்றி எவருமே சிந்திப்பதேயில்லை எனவும் கூறி விசனப்பட்டார்கள்.
எத்தனையோ கொடூரமான கொலைகளை செய்தவர்களும் விலைமதிக்கமுடியாத சொத்துக்களையெல்லாம் அழித்தவர்களும் இன்று உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வசதி வாய்ப்புகளுடனும் தங்களை ஒரு மிகப்பெரிய ஜனநாயகவாதிகளாகக் காட்டிக்கொணடு பொறுப்பான பதவிகளையும் வகித்துக்கொண்டு; அதி உயர் பாதுகாப்புக்களுடன் வலம் வரும் போது இவர்கள் பாவம் ஏதோ சிறு சிறு குற்றங்களை செய்துவிட்டு சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றார்கள். அதுமட்டுமல்லாமல் பலர் தாங்கள் செய்த குற்றங்களுக்காக மனம் வருந்தி வேதனைப்பட்டார்கள். ஒரு சிலர் தங்களையறியாமல் என்ன செய்வது என்று தெரியாமல் நிர்ப்பந்தத்தின் பேரில் குற்றமிழைத்தவர்களும் உள்ளனர். ஒரு சிலர் விடுதலைப் புலிகளுக்கு ஒரு வேளை சாப்பாடு கொடுத்தவர்களும் ஒரு வேளை தேநீர் கொடுத்தவர்களும் புலிகள் என்று தெரியாமல் வீடுகளில் தங்குவதற்கு இடம் கொடுத்தவர்களும் உள்ளனர். இவ்வாறானவர்களின் பரிதாபகரமான நிலைமையினை எமது குழுவினர் தiலைவரிடம் எடுத்துக்கூறினர்.
மேலும் சில அப்பாவி மலையகத்து இளைஞர்கள் என்ன செய்கின்றோம் எதற்காக செய்கின்றோம் எனத் தெரியாமல் விளைவுகளைப்பற்றியறியாமல் சிறு சிறு தவறுகளைச் செயதுவிட்டு சிறையில் வாடிக் கொண்டிருக்கின்றார்கள் இவ்வாறான அப்பாவிகளின் எதிர் காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
எது எப்படியோ இவர்களுக்கெல்லாம் பொது மன்னிப்பு என்றபேரிலாவது நிபந்தனையின் அடிப்படையில் சில பெரியோர்களின் கையில் பொறுப்பினை ஒப்படைத்து விடுதலை செய்ய முயற்சியினை மேற்கொண்டு சம்மந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லுமாறு எமது குழு தலைவரைக் கேட்டுக்கொண்டது.
எமது குழுவினரின் அறிக்கைகளையும் கோரிக்கைகளையும் பார்த்தும் கேட்டும் தெரிந்து கொண்ட எமது தலைவர் கௌரவ வீ. ஆனந்தசங்கரி அவர்கள் மிக விரைவில் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களை சந்தித்து சிறையில் இருப்பவர்களின் விடுதலைக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கையினை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார்;.
எமது தலைவர் அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது யாழ்ப்பாண விஜயத்தின் போது எடுத்த நடவடிக்கை காரணமாக குறிப்பிட்ட ஒரு குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வந்த வெள்ளை வான்களில் ஆட்களை கடத்தல் கொலை செய்தல் போன்ற சம்பவங்கள் வெகுவாகக் குறைந்துள்ளன. மேற்படி குழுவினரின் செயற்பாடுகளை உயர் பாதுகாப்பு அதிகாரிகளின் கவனத்திற்கு எமது தலைவர் எடுத்துச் செனறதாலேயே இச்சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டன. சில ஊடகங்கள் எம்முடன் இணைந்து தைரியத்துடன் செயற்பட்டாலே போதும் இவ்வாறான வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
மேலும் எமது குழுவினர் காணாமல் போனவர்கள் சம்மந்தமாக இன்னும் சில இடங்களை பார்வையிடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கீழே பெயர் குறிப்பிட்டவர்களின் உறவினர்கள் யாராவது இருந்தால் எம்முடன் தொடர்பு கொள்ளவும்.
1. சிவபாதசுந்தரம் சோபனா சுண்டிக்குளம் 40ம் வாய்க்கால் பிரமந்தனாறு விசுவமடு2. வேலன் முருகுப்பிள்ளை 12 கட்சன் வீதி வட்டக்கச்சி3. இராசரத்தினம் அற்புதமலர் தேவன் பிட்டி வெள்ளாங் குளம் புதுக்காடு மன்னார்4; ஜேகதீஸ்வரன் ஜெயதரன் அடம்பன் மன்னார்5. அருமைநாதர் குகதர்சினி வைரவர் கோவிலடி கண்டி வீதி பரந்தன்6. இராசலிங்கம் வளர்மதி(கார்த்திகா) 137 உதயநகர் கிளிநொச்சி7. பாஸ்கரன் சிவசக்தி அருட்செல்வராணி 57 கல்விளான் துனுக்காய்8. த. சுபாசினி இணுவில் தெற்கு இணுவில்9. கணேசலிங்கம் 566 7ம் யுனிட் இராமநாதபுரம் வட்டக்கச்சி10. சிவனடியான் குகராஜ் அளவெட்டி தெற்கு அளவெட்டி11; மகேந்திரன் மதனகுமார் உக்கிலாங்குளம் வவுனியா12. கந்தசாமி யசிந்தன் வரணி யாழ்ப்பாணம்13. ஜெயராசா அசோக்குமார் பாசையூர் யாழ்ப்பாணம்14. பூபாலசிங்கம் கபிலன் பத்தூர் கிழக்கு புத்தூர்15. சண்முகநாதன் சதீஸ்கரன் இணுவில் கிழக்கு இணுவில்16.;;; பஸ்டியான் தினேஸ் நாவலர் வீதி நாவாந்துறை யாழ்ப்பாணம்17. இராசலிங்கம் சந்திரமோகன் உடபுஸ்ஸல்லாவ18. அய்யாத்துரை முருகஜோதி வேப்பங்குளம் வவுனியா19. கிருஸணபிள்ளை சந்திரமோகன் கல்லப்பாடு முல்லைத்தீவு20. அரியதாஸ் சிவாஜினி உரும்பிராய் கிழக்கு உரும்பிராய்
தொடர்புகளுக்கு 30 1பி அல்விஸ் பிளேஸ் கொழும்பு ௦௩

தொலைபேசி 0112347721 077 2487339

ஊடகச் செயலாளர்தலைமைச் செயலகம்தமிழர் விடுதலைக் கூட்டணி

0 commentaires :

Post a Comment