2/25/2009

கல்வி வளர்ச்சிப் பணிகளில் கூடிய கவனம் கொள்ளும் முதல்வர் சந்திரகாந்தன்.


அண்மையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பிரத்தியேக நிதி ஒதுக்கீட்டில் சமூக நலன் மேம்பாட்டுத் திட்டத்தின் ஊடாக பல்வேறு கிராமங்களுக்கு மற்றும் பாடசாலைகளுக்காக பல கோடி ரூபா செலவில் பாடசாலைகளுக்குத் தேவையான உபகரணங்கள் ஆலயங்களக்கான ஒலிபெருக்கிகள் மற்றும் பொது விளையாட்டு மைதானம் செப்பனிடுதல் பொது மயானம் மற்றும் பாதைகள் புனர்நிர்மானித்தல் போன்ற பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அதனொரு அங்கமாக இன்று(24.02.09) மட்/ வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்திற்கு நேரடியாகச் சென்ற கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அப்பாடசாலையின் அதிபர் திரு. பஞ்சலிங்கம், ஆசிரியர்கள் மற்றம் மாணவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டார். புhடசாலை எதிர்நோக்குகின்ற வளப்பற்றாக்குறைகள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. மாணவர்களின் கல்விநிலை மற்றும் இப்பாடசாலையின் பெருமை தொடர்பாகவும் பேசிய அதிபர் தங்களது பாடசாலைக்கு பாண்ட்வாத்திய உபகரணங்களும் மற்றும் மல்டிமீடியா புரஜெக்டரும் தேவை எனக் கேட்டுக் கொண்டதற்கிணங்க அதனை முதலமைச்சர் எமது பாடசாலைக்கு நேரடியாக வந்து வழங்கி வைப்பதனையிட்டு நானும் எமது பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் இவ்ஊர் மக்கள் அனைவரும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம் எனக் குறிப்பிட்டார். இதில் கலந்து கொண்டு உரையாற்றிய முதல்வர் மட்டக்களப்பு மாவட்டத்திலே கல்குடா வலயத்தில் மிகவும் பழமையாலும் அதிக மாணவர்களாகக் கொண்ட ஓர் பாடசாலையாகவும் இப் பாடசாலை விளங்குகின்றது. இவ்வாறாக இருந்தேயேனும் மாணவர்களின் கல்வித்தரத்தில் தற்போதுதான் ஓரளவு முன்னேற்றம் காணப்பட்டு வருகின்றது. இந் நிலமையினை தொடர்ந்து கொண்டு செல்வதற்கு பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் மற்றும் ஊர்மக்கள் இதய சுத்தியுடனும் மிகவும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டனர் அதனை அடைவது மிகவும் சுலபமானதே மேலும் இப்பாடசாலையானது ஆரம்பகாலத்தில் பல்வேறு கல்விமக்களை உருவாக்கி இருக்கின்றது. ஆனால் இன்று அந்நிலை மாறி இருக்கின்றது. இதற்கு எமது சூழல் ஓர் காரணம் எனலாம். ஆனால் தற்போது எந்தவொரு பிரச்சினைகளும் இல்லாமல் கிழக்கு மாகாணம் இருக்கின்றது. எனவே மாணவர்கள் விரும்பியவாறு தங்களின் கல்விச் செயற்ப்பாட்டில் ஈடுபட்டு உயர்ச்சித்திகளைப் பெற்று எதிர் காலத்தில் நல்ல கல்விமான்களாகமாறி எமது மாவட்டத்திற்கும் நாட்டிற்கும் சேவை செய்யக் கூடியவர்களாக மாறவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். மேலும் குறிப்பிடுகையில் இப்பாடசாலை எமது மாகண அரசின் கீழ் இருப்பதனால் இப்பாடசாலை தொடர்பான அனைத்து விடயங்கள், தேவைகள் என்பவற்றை என்னிடம் நீங்கள் முன் வைத்தீர்கள் இதனை நான் பரிசீலினை செய்து உடனடியாக அது தொடர்பான நடவடிக்கையினை மேற் கொள்வேன் எனவும் குறிப்பிட்டார்.


0 commentaires :

Post a Comment