- டாக்டர் எம்.ஜீ.எம் சுர்பிக் -
புலிகளை யுத்தத்தால் வெல்ல முடியாது என்று மக்களுக்குப் பூச்சாண்டி காட்டிக் கொண்டு இந்நாட்டை அந்நிய ஆதிக்க சக்திகளுக்கு அடகுவைப்பதற்கு ஐ.தே.க மேற்கொண்ட முயற்சி இனியும் மக்களிடம் எடுபடாது.
அந்த பாசிச சித்தாந்தவாதிகளை வெல்ல முடியாது என்று பூச்சாண்டி காட்டியதுடன் மட்டும் நின்றுவிடாமல் அவர்களுக்கு நாட்டைத் துண்டாடுவதற்கு அவர்கள் போட்ட சதித்திட்டம் எமது வீரமிக்க படையினரால் தோற்கடிக்கப்பட்டு இன்று வரலாற்றின் பக்கங்களில் புதியதோர் அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது.
ஆனையிறவு எனும் யுத்த தளம் மீதான ஆதிக்கத்தையும், கிளிநொச்சி மீதான கட்டுப்பாட்டையும் வைத்துக்கொண்டு இந்நாட்டின் இறையாண்மைக்கும் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கும் சவால் விடுத்துக் கொண்டிருந்த பயங்கரவாதிகளின் முள்ளந்தண்டு இன்று முறிக்கப்பட்டுள்ளது. ஆனையிறவு மீள விடுவிக்கப்பட்டதுடன் பாசிச சித்தாந்தத்தின் மரணப் பெட்டி மீதான கடைசி ஆணி அடிக்கப்படுவதற்கான காலம் கனிந்து வருவதை நாம் இன்று உணர்ந்துகொள்ளக் கூடியதாக உள்ளது.
கிழக்கு விடுவிக்கப்பட்டது மாத்திரமன்றி பயங்கரவாதத்தின் நிழல் கிழக்கு மாகாணத்திலிருந்து முழுமையாக துடைத்தெறியப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண பிரதேசங்களும் மக்களும் இன்று அபிவிருத்தியின் பலனை முழுமையாக அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். வடக்கும் மிக விரைவில் விடுவிக்கப்பட்டு அங்கும் புதியதோர் வசந்தம் மலர்வதற்கான காலம் கனிந்து கொண்டிருக்கின்றது.
இவையெல்லாம் சாத்தியப்படுவதற்கான காரணம் அதிமேதகு ஜனாதிபதியின் தூரதிருஷ்டிமிக்க தலைமைத்துவம் தான் என்றால் அது மிகையல்ல. சுதந்திர இலங்கையில் அதிகாரத்துக்கு வந்த தலைவர்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு வித்தியாசமான மக்கள் தலைவராக மிளிர்ந்து கொண்டிருக்கின்றார்.
நாட்டின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மை யையும் பாதுகாப்பதற்கான முயற்சிகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார். பயங்கரவாதத்தின் நிழலை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து மட்டுமன்றி, முழு நாட்டிலிருந்தும் ஒட்டுமொத்தமாகத் துடைத் தெறிவதற்கான நடவடிக்கைகளை துணிச்சலுடன் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்.
வரண்ட பிரதேசங்களாக கணிக்கப்பட்ட இடங்கள் இன்று வியத்தகு முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. மக்களின் வாழ்க்கைத் தரம் கணிசமானவுக்கு உயர்ந்துள்ளது. உட் கட்டமைப்பு வசதிகள் எதிர்பார்க் கப்பட்ட தற்கும் மேலாக மேம்படுத் தப்பட்டுள்ளன.
இவ்வாறாக ஒரு பக்கம் திறமையான முறையில் பயங்கரவாதத்தை முறியடிப்பதற் கான நடவடிக்கைகள் துணிச்சலுடன் முன்னெ டுக்கப்படும் அதேவேளை மறுபக்கத்தில் நாடெங்கிலும் அபிவிருத்தியின் வேகம் பரவலாக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களும் சுதந்திரக்காற்றை சுவாசித்து, நிம்மதியாகவும் அச்சமின்றியும் வாழத்தக்கதான சூழல் இன்று மலர்ந்துள்ளது. அதற்கு மேலாக பருத்தித்துறையிலிருந்து தெய்வேந்திரமுனை வரை தங்குதடையின்றி பயணம் செய்வதற்கான சூழல் மிக விரைவில் ஏற்படுத்தப்படப் போகின்றது.
இவற்றுக்கெல்லாம் காரணம் அதிமேதகு ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள் இராணுவத் தளபதி மற்றும் கடற்படை, வான்படை, பொலிஸ் போன்றவற்றின் பிரதானிகளின் துணையுடன் ஒட்டுமொத்த இராணுவத்தினரது அர்ப்பணிப்புடன் வழங்கிக் கொண்டிருக்கும் செயற்பாட்டு ரீதியான பக்கத்துணையாகும். இராணுவத்தில் கடமையாற்றி அனுபவம் பெற்றவர் என்ற வகையில் பாதுகாப்புச் செயலாளர் என்ற பதவியை அலங்கரித்துக் கொண்டிருக்கும் அவரது திறமை கூர்மையானது.
ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் போது இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. அனைத்து விடயங்களிலும் நாடு பின்னோக் கியே சென்று கொண்டிருந்தது. நாட்டை கெடுத்துக் குட்டிச் சுவ ராக்குவதன் மூலமாக தமது வயிற்றை நிரப்பிக் கொள்வது குறித்தே ஐக்கிய தேசியக் கட்சி அரசியல்வாதிகள் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் இந்த அரசாங்கம் அந்த நிலைமையை தலைகீழாக மாற்றியுள்ளது.
இவ்வாறான நிலையில் புலிகளின் தலைவர் இனியும் காலம் தாழ்த்தாது உடனடியாக சமாதானப் பேச்சு வார்த்தைக்கு முன்வந்து அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் நீட்டிய நேசக்கரத்தைப் பற்றிக்கொள்ள வர வேண்டும். ஏனெனில் இதுதான் அதற்கான இறுதிச் சந்தர்ப்பம்.
அதன் மூலமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கான அரசியல் உரிமைகளை சிநேகபூர்மான கலந்துரையாடலின் மூலமாகப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். அதை விடுத்து இன்னும் அழிவுகளை மட்டுமே தரக்கூடிய மோதல் போக்கை தொடர்வது தமிழ் மக்களுக்கு மாத்திரமன்றி ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் பாதிப்பானதாகவே அமையும் என்பதை சிந்தனையில் கொள்ள வேண்டும்.
நன்றி: தினகரன்

0 commentaires :
Post a Comment