2/28/2009

ஹாடி தொ.நு. கல்லூரி கிழக்கு தொழில்நுட்பவியல் கல்லூரியாக தரமுயர்வு

அம்பாறை ஹாடி தொழில்நுட்பக் கல்லூரி கிழக்கு மாகாண தொழில்நுட்பவியல் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை பிரகடனப்படுத்தி திறந்துவைக்கும் வைபவம் இன்று 28ஆம் திகதி பி.ப. 2.00 மணிக்கு தொழில் தொழில் பயிற்சி அமைச்சர் பியசேன கமகேவினால் கல்லூரியில் வைத்து இடம்பெற உள்ளது.
இப்பயற்சி நெறிகளுக்கு மாணவிகள் சேர்த்துக்கொள்ளப்பட உள்ளனர். மோட்டார் வாகன தொழில்நுட்பவியல் கட்டிட நிர்மாண தொழில்நுட்பவியல் தகவல் தொழில்நுட்பவியல் ஆகிய டிப்ளோமா, உயர்தர டிப்ளோமா ஆகிய பாடநெறிகளுக்கான விண்ணப்பங்களை கல்லூரி அலுவலகத்தில் 28ஆம் திகதி முதல் பெற்றுக்கொள்ள முடியும் என கல்லூரி அதிபர் ஏ.எல். பதுர்தீன் தெரிவித்துள்ளார்.



0 commentaires :

Post a Comment