கந்தகுட்டி போடியாரிடம் கப்பம் கேட்டு மிரட்டியவர்கள் பொலிசாரால் கைது.
கிழக்கு மாகாணத்தில் பிரதேச சபைகளும், மாகாண சபையும் மக்களால் தெரிவு செய்யப்பட்டு அரசநிர்வாகங்கள் நடந்துகொண்டிக்கின்றது. இருந்தாலும் இடையிடையே நடைபெறும் வன்முறைச் சம்பவங்கள்இன்னும் இருக்கத்தான் செய்கின்றன. இதை யார் செய்கின்றார்கள் என்பது பற்றி மக்களிடம் பலகுழப்பங்களும், அதிருப்தியும் காணப்பட்டு வருகின்றது. இந்த வன்முறைகள் முற்றாக அகற்றப்படவேண்டும் எனவும் மேற்படி சம்பவங்களில் சம்பந்தப்பட்;டவர்கள் யாராயிருந்தாலும் மிக கடுமையானநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் முதலமைச்சர் சந்திரகாந்தன் பொலிஸ் அதிகாரிகளுக்குஅடிக்கடி அறிவுறுத்தி வந்தார். கடந்த மாதம் கூட மாகாண மட்டத்திலான பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன்பொதுமக்களின் பாதுகாப்புக் குறித்து உயர்மட்டப் பேச்சு ஒன்றினையும் முதலமைச்சர் நடத்தியிருந்தார்.
இந்த நிலையில் மட்டக்களப்பில் இதுவரை இடம்பெற்று வந்த பல கப்பம், கொலை போன்றவற்றின்சூத்திரதாரிகள் மூவர் நேற்று பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் ய+லி என்றுஅழைக்கப்படும் நியுட்டனாகும். இவர் பாராளுமன்ற உறுப்பினர் முரளிதரன் அவர்களால் தனது சார்பிலானகல்விப் பொறுப்பாளர் என நியமிக்கப்பட்டிருந்தவர் ஆகும். இவர் அண்மையில் இடம்பெற்ற முதலமைச்சரின்பிரத்தியேக செயலாளர் சீலனின் சாரதியான கண்ணன் என்பவரை சுட்டமை மற்றும் சீலனின் பாதுகாவலரைபாமசியில் வைத்து சுட்டுக்கொன்ற சம்பவங்கள் தொடர்பாக பொலிசாரால் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.இரண்டாவது நபர் தாசன் என்று அழைக்கப்படுபவர். இவர் மட்டக்களப்பின் நகரின் மத்தியில் கருணாஅம்மானின் இலங்கை வருகைக்கு பின்னர் அமைக்கப்பட்ட புதிய தேனகம் எனும் அலுவலகத்தின்பொறுப்பாளர்களில் ஒருவராவார். மூன்றாவது நபர் தருமராசா அப்புகாமி ரவிக்குமார் என்பவராகும்;. இவர்சமயப்பொறுப்பாளர் என்று கருணா அம்மானால் நியமிக்கப்பட்டவர்.
இவர்கள் மூவரும் நேற்று புதூர் நகருக்கு சென்றுவரும் வேளையில் பொலிசார் வழிமறித்துப் பிடித்தனர்.இவர்களிடம் 3 ஏ.கே ஆயுதங்களும், பிஸ்டள்களும் இருந்ததாகவும் அவர்கள் வந்த பஜரோ கொழும்புநகரில் தீருடப்பட்ட வாகனம் எனவும் பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர் எனவும் தெரியவருகிறது. இவர்கள் புதூருக்கு சென்று கந்தக்குட்டி போடியாரிடம் கப்பம் கேட்டு மிரட்டிவிட்டு வரும் போதேபிடிபட்டனர். நியூட்டன் கல்விப் பொறுப்பாளர் என்ற போர்வையில் பலரிடம் கப்பம் பெற்று பல இலட்சம்ரூபாய்களை அவருடைய வங்கிக் கணக்கில் வைத்திருப்பதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இவர் மீது ஏற்கனவே பொலிஸில் பல முறைப்பாடுகள் இருப்பதாகவும் தெரியவருகிறது.

0 commentaires :
Post a Comment