வட இலங்கையில் போர் நடக்கும் பகுதிகளில் இருந்து மக்களை மீட்க பொருத்தமான மற்றும் நம்பகமான நடைமுறைகளை வகுக்குமாறு இந்தியா கேட்டுள்ளது.
இலங்கையில் போர் நடக்கும் பகுதியில் சிக்கிக் கொண்டிருக்கும் சிவிலியன்களை பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்க வேண்டும் என்ற சர்வதேச நாடுகளின் கோரிக்கை குறித்து பேச்சு நடத்தத் தயாராக இருப்பதாக விடுதலைப் புலிகள் அறிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இலங்கை அரசும், தொடர்புடைய மற்ற அமைப்புக்களும், அந்த மக்களை மீட்க பொருத்தமான மற்றும் நம்பகமான நடைமுறைகளை வகுக்குமாறு இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.
அவ்வாறு பொதுமக்களை மீட்கும் நடவடிக்கையின்போது, அவர்கள் பாதுகாப்பான பகுதிக்குக் கொண்டு செல்லப்படுவதை சர்வதேச அமைப்புக்கள் கண்காணிக்கும் வகையில் இருக்க வேண்டும் என இந்தியா குறிப்பிட்டிருக்கிறது.
பாதுகாப்பான பகுதியாக அறிவிக்கப்படும் பிராந்தியத்தை இரு தரப்பினரும் மதித்து நடக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மீட்டு வருவதற்கும், அவர்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்கள், மருந்து மற்றும் மருத்துவ உதவிகளைச் செய்வதற்கான நடைமுறைகளுக்கு உதவி செய்யவும், இந்தியா தயாராக இருப்பதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
0 commentaires :
Post a Comment