முதல் தொகுதி ஆயுதங்களை அடுத்தவாரம் ஒப்படைக்கவுள்ளோம். ரி.எம்.வி.பி. ஊடகப் பேச்சாளர் அசாத் மௌலானா தெரிவிப்பு.
கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து கிழக்கு போராளிகள் பிரிந்தபோது எமது ஜனநாயக வழிக்கு பாரிய சவாலை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்படுத்தினர். இதன் காரணமாக நாம் ஆயுதங்களை மீண்டும் தரிக்கவேண்டிய நிலைக்கு உள்ளாக்கப்பட்டோம். கிழக்கின் விடிவெள்ளிகளான இராஜன் சத்தியமூர்த்தி, கிங்ஸிலி இராஜநாயகம் போன்றோர் தொடங்கி எமது புத்தி ஜீவிகள் பொதுமக்கள் மற்றும் போராளிகள் என்று சுமார் 1000 பேர் வரை பிரபாகரனால் கொன்றொழிக்கப்பட்டனர். அந்த நிலையில் எமது பாதுகாப்புக்காக ஆயுதங்களே எமக்குத் துணையாக இருந்தன. அதேவேளை கிழக்கு மாகாணம் புலிப்பயங்கரவாதத்தைத் தோற்கடித்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்த பின்னர் நாம் ஜனநாயக நடவடிக்கையில் ஈடுபடக் கூடியதாய் இருந்தது. எனினும் தொடர்ந்து ஆங்காங்கே காணப்பட்ட புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக ரி.எம்வி.பி. ஆகிய எமது கட்சியானது அரசியல் பிரிவுடன் இணைந்து இராணுவப் பிரிவையும் இதுவரை வைத்திருந்தோம். எமது இராணுவப் பிரிவானது நாம் அரசியல் கட்சியாக மாற்றம் பெற்றதில் இருந்து உறங்கு நிலையில் இருந்தது. எனினும் புலிகள் தோற்கடிக்கப்பட்டுவரும் இந்தநிலையில் எமது இராணுவப் பிரிவை முழுமையாகக் கலைப்பதற்கான காலம் வந்துவிட்டதாக உணருகின்றோம். என உண்மைகள் இணையத்தளத்திற்கு ரி.எம்.வி.பி. யின் ஊடகப் பேச்சாளர் அசாத் மௌலான தெரிவித்தார். அப்படியானால் ஆயுத ஒப்படைப்பு எப்போது நிகழும் என வினவியபோது, விரைவில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. அனேகமாக அடுத்தவாரம் நாம் முதல் தொகுதி ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான நாள் ஒன்று குறித்து பரிசீலனை செய்துவருகிறோம் என்றார்.

0 commentaires :
Post a Comment