22.02.2009 - ஞாயிற்றுக்கிழமை
மோதல்களினால் பாதிக்கப்பட்ட வடக்கு சிறுவர்களின் பொது நலன்களை பாதுகாக்க சர்வதேச சமூகங்கள் முன்வர வேண்டும் என்பதுடன் பொது மக்களையும் குறிப்பாக சிறுவர்களை பாதுகாப்பு வலயங்களுக்கு செல்ல புலிகள் அனுமதிக்க வேண்டும் ஐக்கிய நாடுகள் சபை கோரியுள்ளது. இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் யுத்த வன்முறை மற்றும் சிறுவர்கள் தொடர்பான விசேட தூதுவர் ராதிகாகுமாரசுவாமி தெரிவிக்கையில் வன்னியில் இடம்பெறும் மோதல்களில் பெருமளவிலான சிறுவர்கள் பாதிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. உள்ளக இடப்பெயர்வுகளுக்கு உள்ளான சிறுவர்களை பாரபட்சமின்றி பராமிக்கும் பொருட்டு சர்வதேச சமூகங்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும். மேலும் பொது மக்களையும் குறிப்பாக சிறுவர்களை பாதுகாப்பு வலயங்களுக்கு செல்ல புலிகள் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபையின் யுத்த வன்முறை மற்றும் சிறுவர்கள் தொடர்பான விசேட தூதுவர் ராதிகாகுமாரசுவாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
0 commentaires :
Post a Comment