2/22/2009

பதிலளிக்கிறார் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஹிஸ்புல்லா


ஐரோப்பாவிலும் இலங்கையிலும் இருந்து ஒரே நேரத்தில் ஒலிபரப்பாகும் “டான்” தமிழ் ஒலி என்னும் வானொலி ஊடாக கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எல.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்கள் இன்று மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கின்றார். இன்று சனியன்று (21-02-2009) இரவு 2.30 மணியில் இருந்து 4.30 மணிவரை (இலங்கை நேரம்) இந்த நிகழ்ச்சி இடம் பெற உள்ளது. “உறவுப்பாலம்” என்றழைக்கப்படும் இந்நிகழ்சியானது ஐரோப்பிய நேரம் இரவு 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. கிழக்கு மாகாண சுகாதார, இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் எம்.எல.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்களிடம் கிழக்கு மாகாண அரசியல் சூழல் குறித்தும் மாகாணசபை வேலைத்திட்டங்கள் குறித்தும் மற்றும் வன்னியில் இருந்து கிழக்கு மாகாணத்திற்கு அழைத்து வரப்படுகின்ற பாதிக்கப்படுகின்ற மக்கள் குறித்தும் பொதுமக்கள் கேள்விகள் கேட்டு விபரங்களை அறிந்துகொள்ள முடியும்.
தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்: 0033-148353200

0 commentaires :

Post a Comment