2/20/2009

மீண்டும் படுகொலை கலாச்சாரமா? வேண்டாம்.


நேற்றுமாலை 7।40 அளவில் மட்டக்களப்பில் சரத்தீஸன் என்னும் இளைஞர் கொலைசெய்யப்பட்டுள்ளார். இவர் கிழக்கு முதலமைச்சர் சந்திரகாந்தனுடைய பிரத்தியேகச் செயளார் சீலன் அவர்களின் மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவராகும். நீண்டகால ரி.எம்.வி.பி. போராளியான இவர் படுகொலைசெய்யப்பட்டுள்ளமை கடுமையான கண்டனத்துக்குரியதாகும். ரி.எம்.வி.பி. வட்டாரங்களின் தகவல்களின் அடிப்படையில் இது உட்கட்சிப் பழிவாங்கல் என எம்மால் ஊர்ஜிதப்படுத்த முடிந்தது. மீண்டும் மீண்டும் படுகொலைகளினூடாக அரசியல் செய்யவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என பகிரங்கமாக கேட்டுக்கொள்கின்றோம். எந்தவொரு அரசியல் கட்சிக்குள்ளும் முரண்பாடுகள் நிகழ்வது சகஜம். இதுவரையில் ரி.எம்.வி.பி. இல் இருந்த உள்முரண்பாடுகள் காரணமாக சிந்துஜன், திலீபன், ரகு போன்ற முக்கிய போராளிகளின் உயிர் வீணாக குடிக்கப்பட்டிருக்கின்றது. இன்னிலை தொடரக்கூடாது. புலிகள் போன்ற அமைப்பில் இருந்து வெளியேறிய ரி.எம்.வி.பி. யினர் தமது ஜனநாயக வரவை உறுதிப்படுத்திக் கொள்ள ஆயுதக் கலாச்சாரத்தை விட்டொழிப்பதே முதற்பணியாக இருக்கவேண்டும். அதை விடுத்து இன்னும் இன்னும் துப்பாக்கிகளின் நம்பிக்கை வைத்து செயற்படுவது என்பது ஜனநாயக மரபுகளுக்கு சவால் விடுவதாகவே இருக்கும். எமது இளைஞர்கள் இதுவரை அழிந்தது போதும். அதுவும் கிழக்கு மாகாணம் போன்ற பிற்படுத்தப்பட்ட பிரதேசம் நவீன உலகை நோக்கி நடைபோட இன்னும் நியாயமான தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. ஆனால் நாமோ இன்னும் இன்னும் கொலைவெறிகொண்டு அலைந்துகொண்டு இருப்பது கேவலமானதொன்றாகும் என்பதை இக்கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் இனியாவது புரிந்துகொள்ள வேண்டும்.
ஆ.ர்

0 commentaires :

Post a Comment