2/27/2009

செஞ்சோற்றுக்கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து செய்வதறியாது திணறும் கனகரெட்னம் எம்.பி.

- கதிர் -


தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.களாக 22 பேர் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இவர்களில் பலர் இன்று நாட்டில் இல்லை. ஜெயானந்தமூர்த்தி, கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன், ஈழவேந்தன், சிவாஜிலிங்கம், அடைக்கலநாதன் என்று பலரும் புலிகளுக்கு பொங்குதமிழ் முறுக்கேற்றிவிட்டு தத்தமது வாழ்க்கை வசதிகளுக்கும் சொந்தபந்தங்களுக்கும் ஏற்ப மேற்குலக நாடுகள் ஒவ்வொன்றிலும் ஓடிப்போய் தங்கிக்கொண்டார்கள். கனகசபை, தங்கேஸ்வரி, அரியநேந்திரன் என்று..... மட்டக்களப்பு எம்.பி. க்கள் நொந்து நொடிஞ்சி கொழும்பிலே குந்திக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களின் நிலை சொந்த ஊருக்கும் போக முடியாது, தூர இடங்களுக்கும் ஓடித்தப்ப வசதி வாய்ப்பில்லை செய்வதென்னதென்று தெரியாது பரிதாபமானது. கிழட்டுப்புலி சம்பந்தன் மட்டும் வொய்ஸ் ஒவ் ரைகர்ஸ் ஆக சத்தம் போட்டுக்கொண்டிருக்கின்றார். எல்லோரையும் விட பாவப்பட்ட ஜீவனாய் அந்த கனகரெட்னம் அய்யா மட்டுமே பாவம். மனிசன் ஓட இடம் இல்லாமலோ, ஓட முடியாமலோ யுத்தத்திற்குள் மாட்டுப்பட்டு விட்டார். நிச்சயம் தானாக விரும்பி எனது மக்களை விட்டுப் போக மாட்டேன் என்று அவர் முல்லைத்தீவிலே தங்கியிருப்பார் என்று நம்ப முடியாது. சிலவேளை அப்படி அவர் விரும்பித்தான் அவர் முல்லைத்தீவில் நின்றிருந்தால் அவர் மனிசன்தான். எப்படியோ இப்போது முல்லைத்தீவில் இரந்து மக்களின் அங்கீகாரம் பெற்ற ஒரு மனிதனாக அவர் மட்டுமே குரல் கொடுக்க முடிகின்றது. சுதந்திரமாக கருத்துக்களை வெளியிடும் உரிமை இந்த கூட்டமைப்பு எம்.பி.க்களுக்கு எப்;போதுமே இருந்ததில்லை. என்கின்ற நிலையில் புலிகளின் பிடியில் இருக்கின்ற கனகரெத்தினம் அய்யா தெரிவிக்கும் கருத்துக்கள் துப்பாக்கி முனையைத் தாண்டித்தான் தனது கருத்துக்களை வெளியிடும் வாய்ப்பைப் பெறமுடியும் என்பது யாரும் மறுக்க முடியாத யதார்த்தமாகும். அதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில்தான் அவர் நேற்றைய தினம் பி.பி.சி. க்கு தெரிவித்த கருத்துக்கள் அமைந்திருந்தன. “வன்னியில் 3 லட்சம் மக்கள் இருக்கின்றார்கள்”, “அவர்கள் எல்லாம் எவ்வளவு பாதிப்பை எதிர்கொண்டாலும் இங்கிருந்து போக விரும்பவில்லை.” என்கின்ற அவரது கருத்துக்கள் முழுப்ப+சனிக்காயை சோற்றுக்குள் புதைக்கின்ற முயற்சியாகும். அவரது பேட்டியினைத் தொடர்ந்து வன்னியில் இரந்து தப்பிவந்த பாடசாலைக் குழந்தைகள் தெரிவித்த கருத்துக்கள் இதனை நன்கே உணர்த்தின. ஆனால் கனகரோ யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே வவுனியா, மன்னார், மற்றும் யாழ்ப்பாண மக்கள் கூட முல்லைத்தீவில் வந்து சேர்ந்துவிட்டார்களாம். போதாக்குறைக்கு திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு மக்கள் கூட முல்லைத்தீவில் தங்கியிருக்கிறார்களாம் என்று அவர் சொன்னமையானது கொஞ்சம் ஓவர்தான். பாவம் கனகர் கொஞ்சம்கூட வாய்கூசாது இப்படியொரு புழுகை அவர் அவிழ்த்துவிட வே;ணடிய நிலை அவருக்கு. முழுப்ப+சனிக்காயை சோற்றுக்கள் மறைத்தாலும் மறைக்கலாம் ஆனால் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் இடையில் முடிச்சுப்போட முடியுமோ? இளம் சிறார்களை புலிகள் கட்டாயமாக புலிகள் சண்டையில் ஈடுபடுத்துவது பற்றி உலக நாடுகள் பேசுகின்றனவே என்று பி.பி.சி நிருபர் கேட்ட கேள்விக்கு கனகர் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திணறியதை பி.பி.சி.யை கேட்டவர்கள் புரிந்துகொள்ள சிரமப்பட்டிருக்க மாட்டார்கள். குழந்தையிடம் பொய் பேசாதீர்கள், அதேபோல குழந்தைகளும் பொய் சொல்லாது என்பது நமக்குத் தெரியும். கனகரைத் தொடர்ந்து பி.பி.சி.க்கு முல்லியவளையில் இருந்து தப்பி வந்த பாடசாலைச் சிறுமி இப்படிச் சொன்னாள். “எங்களையும் பிடிக்கத் தொடங்கிட்டாங்கள்”, “ஓ.எல். படிக்கிற அண்ணாவையும் எல்.ரி.ரி.ஈ பிடிச்சுக்கொண்டு போயிட்டாங்கள் நாங்கள் தப்பி ஓடி வந்திட்டம்.” என்று சொன்னமை முல்லைத்தீவின் இன்றைய நிலமையை படம் பிடித்துக் காட்டியது. நிலமை இப்படி இருக்க இந்த பி.பி.சி.யை உலகமெல்லாம் கேட்குதே என்கின்ற கொஞ்சநஞ்ச புத்திகூட இல்லாமல் புதினம் இணையத்தளம் தொடங்கி தீபம் தொலைக்காட்சிவரை கனகரின் பொய்யான வாக்குமூலத்தை உருப்பெருக்கி உண்மையாகக் காட்டத்தொடங்கியுள்ளனர். பாவம் கனகர்தான். செஞ்சோற்றுக்கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து துன்பத்தில் வீழ்ந்திருக்கின்றார். ஆனால் இளையப்துல்லா (அனஸ்) தரவளிகள் ஏன்தானோ தமது மனச்சாட்சிகளை எண்ணுகின்ற பவுண்களுக்கு விற்கத் துணிகின்றனர்?



0 commentaires :

Post a Comment