உலகில் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது இன்று இன்னும் சில மணி நேரத்தில் அறிவிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்த ஸ்லம்டாக் மில்லினர் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இயக்குனர், நடிகர், இசை உள்ளிட்ட துறைகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கு இசையமைத்த தமிழக இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கும் இந்த விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 81 வது ஆஸ்கர் விழாவில் பங்கேற்க ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்த நடிகர்கள் உள்பட 15 கலைஞர்கள் மும்பையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளனர். பாலிவுட் ஆவணப்படமான ஸ்மைல் பிங்கியும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.பிரிட்டிஷ் இயக்குனர் டேனி பாயல் ஸ்லம் டாக் மில்லினர் பிரிட்டிஷ் இயக்குனர் டேனி பாயல் இயக்கப்பட்ட இத்திரைப்படம் மும்பையில் முழுமையாக படமாக்கப்பட்டது. இப்படத்தில் நடித்த சிறுமிகள் அசாத் , ரூபினா கிராமங்களில் அப்குதி மக்கள் ஆஸ்கர் விருது கிடைக்க வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர். மும்பையில் பல தரப்பு மக்கள் பிரார்த்தனை செய்கின்றனர். இந்த விருதுகள் இன்னும் சில மணி நேரத்தில் அறிவிக்கப்படவுள்ளது.இசையமைப்பாளர் ஏர். ரகுமான் லண்டனில் வழங்கப்படும் பாப்டா விருது, 4 முறை தேசிய விருது , 6 முறை மாநில பிலிம்பேர்விருது, கோல்டன் குளோப் விருது பெற்றுள்ளார். ரோஜா என்ற திரைப்படம் மூலம் திரை உலகிற்கு அறிமுகமான இவர் இன்று உலகளாவிய விருதுக்கு தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக காந்தி என்ற திரைப்படத்தில் நடித்த பானு ஆதய்யா இந்த ஆஸ்கர் விருது பெற்றுள்ளார்.இதற்கு பின்னர் இந்தியாவுக்கு ரகுமானின்மூலம் பெருமை கிடைக்கவிருக்கிறது.
0 commentaires :
Post a Comment