2/21/2009

இக்னியாகலையில் 10 ஏழை விவசாயிகள் புலிகளால் படுகொலை


சொந்த மக்களைக் காப்பாற்ற முடியாத புலிகள் சிங்கள அப்பாவிகளைக் கொலைசெய்து பழிதீர்க்க முனைந்திருக்கிறார்கள். இன்று மாலை (சனி) அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த இக்னியாகல பிரதேசத்தில் மீண்டும் ஒரு படுகொலையை புலிகள் நிகழ்த்தியிருக்கிறார்கள். இக்னியாகலை பிரதேசத்தை அண்டிய கிரிமட்டிய என்கின்ற விவசாய கிராமத்திலேயே இப்படுகொலை நடத்தப்பட்டிருக்கின்றது. புலிகளது கோரப்பசிக்கு 10 சிங்கள விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டு இருப்பதோடு மேலும் ஐவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக அறிய முடிகிறது. இறந்தவர்களில் இரண்டுபேர் குழந்தைகள் எனவும் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் இருவர் குழந்தைகள் எனவும் தெரியவருகிறது. வன்னியில் சொந்த மக்களைக் காப்பாற்ற முடியாது புறமுதுகு காட்டி ஓடி ஒழிக்கின்ற புலிகள் அம்பாறையில் வாழுகின்ற சேனை பயிர்ச்செய்து புழைக்கும் ஏழைகள் மீது பழி தீர்த்திருக்கிறார்கள். இப்படுகொலைகள் மூலம் புலிகள் உலகுக்கு சொல்லுகின்ற செய்தி ஒன்றுதான். நாங்கள் பயங்கரவாதிகள்தான். மீண்டும் மீண்டும் திருந்தவே மாட்டோம் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டே இருப்போம் என்பதுதான் அந்த செய்தி. அழிந்துபோதும் தறுவாயில் இனவெறிகொண்லையும் புலிகள் இதுபோன்ற அப்பாவி மக்கள் மீதான படுகொலைகளைச் செய்வதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாது.


0 commentaires :

Post a Comment