11/02/2024

இவரை ஈழத்துக் காமராஜர் என்று புகழுரைக்கலாமா?

கிழக்கு மாகாண முதல் முதலமைச்சர் 

2008ஆம் ஆண்டிலே கிழக்கு மாகாணத்தில் யுத்தம் ஓய்ந்த போது சுமார் முப்பது வருட யுத்த வடுக்களுடன் சமூக பொருளாதார கட்டுமானங்கள் அனைத்தும்  சீரழிந்து கிடந்தன. குறிப்பாக கல்வித்துறை மிகவும் பலவீனமாக கிடந்தது. பல கிராமப்புறப்  பாடசாலைகள் ஒற்றை ஆசிரியர்களுடனேயே இயங்கிக்கொண்டிருந்தன. குறிப்பாக வெருகல், பட்டிபளை,வாகரை, வெல்லாவெளி,வவுணதீவு,திருக்கோவில் போன்ற பிரதேச பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை தலைவிரித்தாடியது. அதிலும் கணித விஞ்ஞான ஆங்கில ஆசிரியர்கள் மிகவும் அரிதாகவே இருந்தனர். யுத்தகால இடப்பெயர்வுகள் காரணமாக பொத்துவில்,நாவிதன்வெளி,வாகரை, புணானை,கரடியனாறு,வெருகல் போன்ற எல்லைக் கிராமங்களில் காணப்பட்ட பல  பாடசாலைகள் ஆசிரியர் பற்றாக்குறை என்பதற்கும்  அப்பால் போதிய மாணவர்களின் வரவு இன்றி மூடப்படும் என்னும்  நிலையில் இருந்தன.

அதேவேளை பல நகர்புற பாடசாலைகளில் தேவைக்கும் மேலதிக ஆசிரியர்கள் குவிந்து காணப்பட்டனர். யுத்தகால வன்முறைச் சூழலையும் சோதனை சாவடிகள்,தடுப்புகள்,கைதுகள் போன்றவைற்றையும் காரணமாகக் காட்டி  பல ஆசிரியர்கள் தத்தமது பிரதேசங்களை அண்மித்த பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுக்கொண்டு சென்றிருந்தனர். இதற்கு யுத்தம் இடம்பெற்ற  காலத்தில் கிழக்கில் கோலோச்சிய பல அமைச்சர்களின் சிபார்சுகள் வாய்ப்பளித்திருந்தன. குறிப்பாக கல்முனை,மட்டக்களப்பு-மத்தி போன்ற கல்வி வலையங்களின் பாடசாலைகளில் தேவையற்ற நிலையில் பல ஆசிரியர்கள் மேலதிகமாக காணப்பட்டனர்.

இந்த நிலையில்தான்  கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்பட்டது.தமிழ் தேசியக்கூட்டமைப்பினரோ 'கிழக்கு மாகாண சபையா அதை நாங்கள் ஏற்கமாட்டோம்' என்று தேர்தலை பகிஷ்கரிக்கக் கோரினர். 
'வடக்கொடு இணைக்காமல் தனியான கிழக்கு மாகாண சபையோ உது உருப்படாது' என்று சாபமிட்டவர்கள் பலநூறு. 

ஆனால் 'தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி'யின் தலைவராகமுன்னின்று  கிழக்கு மாகாண சபையையை வரவேற்றார். தனது பதினாறாம் வயதில் ஆயுதமேந்திய பிள்ளையான் என்னும் போராளி தனது 33 ஆம் வயதில் கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சராக மக்களால் தெரிவு செய்யப்பட்டு தனது வரலாற்றுக்கு கடமையை ஏற்றார். சுமார் நூறாண்டு காலமாக லண்டனிலும் கொழும்பிலும் கற்றுத்தேறிய ஆங்கிலப் புலமை கொண்ட யாழ்- மேட்டுக்குடிகளும் தனவந்தர்களும் பரம்பரையாதிக்கவாதிகளும் மட்டுமே கோலோச்சி வந்த தமிழர் அரசியலில் இந்தப் பிள்ளையானின் வரவு ஒரு புரட்சிகரமான திருப்பமாகும். 

 'முதலமைச்சர் எண்டால் சும்மாவே? இவரால் இதை கொண்டு நடத்த முடியுமே' ? என்கின்ற எள்ளி நகையாடலுக்கும் ஏளனப் பார்வைகளுக்கும் குறைவிருக்கவில்லை.'படிக்காத மட்டக்களப்பான் என்ன சிரைப்பான்' என்று எட்டுத்திக்கும் மத யானைகளாக நின்று எதிர்த்தனர் போலித் தேசியவாதிகள். எந்தவொரு தமிழ் தேசிய (?) பத்திரிகைகளும் முதல்வராக பதவியேற்ற சந்திரகாந்தனை வாழ்த்தி வரவேற்கவில்லை. 

காலம் விடுத்த சவால் 

சாமானிய குடும்பப் பின்னணி,கிராமத்து கல்வி,மொழிப்புலமை கிடையாது,முன்னனுபவம் ஏதுமில்லை, ஆனால் கிழக்கு மக்கள் அவனுக்கு ஆணை வழங்கினார்கள். அந்த ஆணையை, தற்றுணிவுடன் பொறுப்பெடுத்து 'சிரைத்துக் காட்டுகிறேன்' என்று எழுந்து நின்றவன்தான் பிள்ளையான் என்னும் அந்தப்போராளி. 

கிழக்கு மக்களின் கல்வியை வளர்த்தெடுப்பதே எமது மக்களின் அடிமைத்தனங்களை அழித்தொழிக்க சரியான வழி என்பதில் முதல்வராக திடமான நம்பிக்கை கொண்டார். கிடைத்த சந்தர்ப்பங்களை முழுமையாக பயன்படுத்த உறுதி பூண்டார்.பதின்மூன்றாவது சட்டத்திருத்தத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பட்டியல் நீளமாக இருப்பினும் அவற்றில் உண்மையிலேயே தடையின்றி கையகப்படுத்தக்கூடிய அதிகாரங்கள் மிக சிலவாகவே இருந்தன. மாகாண சபைகள் சுதந்திரமாக செயல்படுவதை விரும்பாத  மத்திய அரசு, ஆளுனர் போன்றோரின் இரும்பு பிடிகள் மலையாக எழுந்து நின்றன. மறுபுறம் பல்வேறு கட்சிகளை சேர்ந்த தமிழ் ,முஸ்லிம்,சிங்கள இனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் சக அமைச்சர்கள் போன்ற பலதரப்பட்ட சிக்கல்களுடே காரியங்களை சாதிக்க வேண்டிய மாபெரும் பொறுப்பினை  வரலாறு சந்திரகாந்தனின் மீது சுமத்தியது.

பல்கலைகழகம், பயிற்சி கல்லூரிகள் மற்றும் உயர் பட்டபடிப்பு நிறுவனங்கள் தவிர்ந்த  ஏனைய கல்விசார் நிறுவனங்கள் அனைத்தும் மாகாண சபைக்குரிய அதிகாரங்களின்கீழ் வருபவையாகும். இதன் அடிப்படையில் ஆரம்ப பாடசாலைகள் தொடக்கம் கனிஸ்ட,உயர்தர வகுப்புக்களை கொண்ட கல்லூரிகள் வரை மாகாண கல்வியமைச்சின் ஆளுகைக்கு கீழ் வருபவையாகும். இந்த விடயத்தில் மாகாண சபைகள் தத்தமது  மாகாண கல்வித்துறையில் பாரிய தாக்கம் செலுத்த முடியும் என்பதை அவர் அடையாளம் கண்டுகொண்டார். இதன் காரணமாக கிடைக்காத காணி, போலிஸ் அதிகாரங்களுக்காக ஒப்பாரிவைத்து மத்திய அரசுடன் முரண்படுவதையோ வாய் வீரம் பேசி காலத்தை வீணடிப்பதையோ அவர் விரும்பவில்லை. எனவே  மாகாண சபைக்குரிய கல்வியதிகாரத்தை முடிந்தவரை பயன்படுத்தி பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தார். இந்நடவடிக்கைகள் சுமார் முப்பது வருடமாக உறங்கிக்கிடந்த கிழக்கு மாகாணத்தின்  கல்வித்துறையில் பாரிய மாற்றங்களுக்கு வித்திட்டது.

ஆசிரிய வளங்களை சமனாக பங்கிடும்  வேலைத்திட்டம் 

மேலதிக ஆசிரியர்களை கொண்ட பாடசாலைகளில் இருந்து  பின்தங்கிய பிரதேசங்களுக்கு முடிந்தவரை தேவையான ஆசிரியர்கள் இடமாற்றப்பட்டனர்.யுத்தகால போக்குவரத்து தடைகளையும்,இன முறுகல் நிலைமைகளையும் அலைச்சல்களையும் காரணமாக காட்டி பல ஆசிரியர்கள் இந்த தொலைதூர இடமாற்றங்களை ரத்து செய்ய கோரினர். ஆனால் இடமாற்றங்களை எவ்வித காரணங்களை முன்னிட்டும் ரத்து செய்வதில்லை என்பதில் முதலமைச்சர் உறுதியை கடைப்பிடித்தார். 'அப்போ நீங்கள் அங்கே வாகரைக்கும் திகிலிவட்டைக்கும்  போய் படிப்பிக்காவிடில் அந்த பிள்ளைகளுக்கு படிப்பிப்பது யார்?' என்னும் கேள்வியை இடமாற்றத்தை ரத்து செய்ய கோரிவந்த ஆசிரியர்கள் ஒவ்வொருவரிடமும் அவர் கேட்டார்.இந்த தடாலடி நடவடிக்கைகள் மூலம் கை லஞ்சம் பெற்றுக்கொண்டு ஆசிரியர்களை அவரவர் விரும்பிய இடங்களில் கற்பிக்க அனுமதித்து மாணவர்களுக்கு துரோகம் செய்துவந்த அரசியல் கலாசாரத்துக்கு முதலமைச்சர் சந்திரகாந்தன் முற்றுப்புள்ளி வைத்தார்.

அதேவேளை தூர இடத்து ஆசிரியர்களின் சிரமங்களை புரிந்து கொண்டு அவர்களின் வசதிகருதி முடிந்தவரை அதிகாலையிலிருந்தே விசேட பஸ் சேவைகளை நடத்துவதற்கு உடனுக்குடன் நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதிகளவான ஆசிரியர்களை கொண்ட பட்டிருப்பு தொகுதியின் மையமான களுவாஞ்சிக்குடியிலிருந்து வாழைச்சேனை,வாகரை, கதிரவெளி,தும்பங்கேணி  பிரதேசங்கள் வரை விசேட பஸ் சேவைகள் சீரமைக்கப்பட்டன. ஆங்கிலஆசிரியர்களின் பற்றாக்குறையை தீர்க்க இந்தியாவிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் ஆங்கில ஆசிரியர்களை கொண்டுவரும் முயற்சி எடுக்கப்பட்டபோதும் மாகாண சபைகளின் அதிகாரம் சார்ந்த பல நடைமுறை சிக்கல்கள் காரணமாக அம்முயற்சி கைகூடவில்லை.

யுத்தகாலத்தில் அழிக்கப்பட்டு  கைவிடப்பட்ட நிலையில் பல எல்லை கிராமங்கள் மக்களற்று வெறிச்சோடிக் கிடந்தன. அவற்றையிட்டு தமிழரின் பூர்வீக பூமி பறிபோகின்றது.என்று அவர் பத்திரிகைகளுக்கு அறிக்கை விட்டுக்கொண்டிருக்கவில்லை.  யுத்தத்தின் பின்னர் இடம்பெற்ற மீள்குடியேற்ற திட்டங்கள் ஒருபுறமிருக்க சுயமாக மக்களை மீள குடியமர செய்ய தடையாயிருந்த ஒருசில கட்டுமான வசதிகளை செய்து கொடுப்பதனூடாக அப்பிரதேச பாடசாலைகளை மீள இயங்க செய்ய முடியும் என மதிப்பிடப்பட்டது. குறிப்பாக தென்னமரவாடி தொடங்கி புனானை,கரடியனாறு, பாலையடிவட்டை, வளத்தாப்பிட்டி வரையான இடங்களில் கைவிடப்பட்டபோக்குவரத்துக்கள், கோவில்கள் கடைகள்,சந்தைகள் என்பன மீள அமைக்கப்பட வேண்டிய நிலையில் இருந்தன.இதற்காக தனது ஆளுகைக்குட்பட்ட அனைத்து வளங்களையும் சந்திரகாந்தன் பயன்படுத்த தீர்மானித்தார். குறிப்பாக புனானை பிரதான வீதியோரத்தில் ஒரு கடைத்தொகுதிகூட  கட்டப்பட்டு வேலையற்றோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. அது வாழைச்சேனை பிரதேச சபையின் ஊடாக உருவாக்கப்பட்டது. மட்டக்களப்பின் எட்டு பிரதேச சபைகளும் தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் ஆட்சியில் இருந்தன என்பதால் அந்த வாய்ப்புக்களை தனது மக்கள் நலம் சார்ந்த பணிகளுக்கு சரியாக பயன்படுத்தினார் முதலமைச்சர். இன்றுவரை இயங்குகின்ற இத்திட்டத்தின் பலனாக புணானை மீண்டும் புதுபொலிவு பெறுவதற்கு  அடிகோலிடப்பட்டது .போக்குவரத்து சபையுடன் தொடர்பு கொண்டு தொலை தூர குக்கிராமங்களில் இருந்து புணானை பாடசாலைக்கு வரும் மாணவர்களில் வரவை உறுதிப்படுத்த வாழைச்சேனை போக்கு வரத்து சபை டிப்போவில் இருந்து விசேட சேவை ஒன்று உடனடியாக ஆரம்பிக்கப்பட்டது. அதேபோல முப்பது வருடங்களுக்கு பின்னர்  திருமலையிலிருந்து கிழக்கு மாகாணத்தின் எல்லை கிராமங்களான தென்னமரவாடி வரையுள்ள கிராமங்களுக்கு பஸ் சேவை  மீளத் தொடங்கப்பட்டன. முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கென கொழும்பு வீதியிலே குகனேசபுரம் என்னும் புதிய தனிக்கிராமமே உருவாக்கப்பட்டது. இவையனைத்தும் கைவிடப்படும் நிலையிலிருந்த பாடசாலை மாணவர்களின் வரவுகளை உறுதி செய்யம் நோக்கில் திட்டமிடப்பட்டன. 

பாடசாலைகளை தரமுயர்த்தி நிதி ஒதுக்கீடுகளையும் மேலதிக வளங்களையும் அதிகரித்தல் 

சுமார் முப்பது வருடங்களாக கவனிப்பாரற்றுக் கிடந்த பல ஆரம்ப பாடசாலைகள் கனிஸ்ட பாடசாலைகளாகவும் பல கனிஸ்ட பாடசாலைகள் உயர்தர பாடசாலைகளாகவும் தரமுயர்த்தப்பட்டன. இதனூடாக படுவான்கரை போன்ற பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் முதல்கட்டமாக க.பொ.த.சா/தரம் மற்றும் உயர்தரம்கொண்ட  வகுப்புக்கள் ஆரம்பிக்க ஏதுவாயின. கிழக்கு மாகாணமெங்கும் சுமார் இருநூறு மேற்பட்ட பாடசாலைகள் முதலமைச்சர் சந்திரகாந்தனால் தரமுயர்த்தப்பட்டன.குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பதின்நான்கு பிரதேச அலகுகளில் ஒன்றான வெல்லாவெளி பிரதேசத்தில் மட்டும் தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளின் விபரம் இக்கட்டுரையின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் கீழே பட்டியலிடப் படுகின்றது.

1.40ம் கொலனி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ( 09ஆம் ஆண்டிலிருந்து  க.பொ.த.சா/தரம் வரை தரமுயர்த்தப்பட்டது)
2.சின்னவத்தை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ( 09ஆம் ஆண்டிலிருந்து  க.பொ.த.சா/தரம் வரை தரமுயர்த்தப்பட்டது)
3.கணேசபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ( 09ஆம் ஆண்டிலிருந்து  க.பொ.த.சா/தரம் வரை தரமுயர்த்தப்பட்டது)
4.சங்கர் புரம் விக்னேஸ்வரா வித்தியாலயம் (க.பொ.த.சா/தரத்திலிருந்து க.பொ.த.உயர் /தரமாக தரமுயர்த்தப்பட்டது)
5.பாலையடிவட்டை நவகிரி வித்தியாலயம் (5 ஆம்   ஆண்டிலிருந்து - 9ஆம்  ஆண்டுவரை தரமுயர்த்தப்பட்டது)
6.பாலமுனை  அரசினர் தமிழ் கலவன்  பாடசாலை  (5 ஆம்   ஆண்டிலிருந்து - 9ஆம்  ஆண்டுவரை தரமுயர்த்தப்பட்டது)
7.ஆனைகட்டிய வெளி மலைமகள் வித்தியாலயம்(7 ஆம்   ஆண்டிலிருந்து - 9ஆம்  ஆண்டுவரை தரமுயர்த்தப்பட்டது)
8.13ஆம் கொலனி விக்கினேஸ்வரா வித்தியாலயம்   (க.பொ.த.சா/தரத்திலிருந்து க.பொ.த.உயர் /தரமாக தரமுயர்த்தப்பட்டது)
9.திக்கோடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ( 09ஆம் ஆண்டிலிருந்து  க.பொ.த.சா/தரம் வரை தரமுயர்த்தப்பட்டது).

பாடசாலைகளுக்கு கம்பியூட்டர் அறிமுகம் 

அதேவேளை தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளுக்கு மத்திய அமைச்சுகளில் இருந்து போதிய வளங்களை பெற்று விநியோகிப்பதில் முதலமைச்சர் காட்டிய ஈடுபாடு குறிப்பிடத்தக்கது. அத்தோடு இந்திய தூதரகம் ஊடாக இந்திய அரசாங்கத்துக்கு முதலமைச்சர் விடுத்த வேண்டுகோளின் பயனாக ஆயிரம் கம்பியூட்டர்களையும் பத்து பஸ் வண்டிகளையும் பெற்று கொள்ள முடிந்தது. கிழக்குமாகாணத்தில் உள்ள பெரும்பாலான பாடசாலைகளுக்கும் கல்வி வலையங்களுக்கும் அவை பகிர்ந்தளிக்கப்பட்டன. பல்லாயிரம் மாணவர்கள் முதன்முதலாக கம்பியூட்டர் பயிற்சிகளை மேற்கொள்ள முதலமைச்சரின் அவ்வரிய பணி கால்கோளிட்டது. போக்குவரத்து வசதிகள் இன்றி காணப்பட்ட தூர இடங்களில் இருந்து பாடசாலைக்கு செல்லும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்குடன் ஆயிரக்கணக்கான துவிசக்கரவண்டிகள் இலவசமாக கொடுக்கபட்டன.

முன்பள்ளிகள் மற்றும்  புதிய கல்வி வலையங்கள் 

யுத்தகாலங்களில்  குழந்தைகளுக்கான முன்பள்ளிகள் மத நிறுவனங்களாலும் அரசுசார்பற்ற அமைப்புகளினாலுமே நிர்வகிக்கப்பட்ட வந்தன. அவற்றினை சட்டரீதியாக மாகாண சபைகளுக்கு உட்பட்ட முறையில் மாற்றியமைப்பதும் நெறிப்படுத்துவதும் அவசியமாயிருந்தது. இதனடிப்படையில் மாகாணசபையில்  பாலர்பாடசாலை நியதி சட்டம் உருவாக்கப்பட்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முன்பள்ளிகளையும் மாகாண கல்வியமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதில் வெற்றி காணப்பட்டது. இச்சட்டமானது கல்வி சார்ந்து 13வது சட்டத்திருத்தத்தின் ஊடாக  மாகாண சபைகளுக்கு வழங்கப்படுள்ள அதிகாரங்களை கையகப்படுத்தும் முயற்சிக்கு கிடைத்த ஒரு வெற்றியாகும்.

அதேபோன்று சுமார் முப்பது வருட காலமாக எதிர்காலம் பற்றிய எவ்வித திட்டமிடலும் முன்னேற்றமும் இன்றி இயங்கி கொண்டிருந்த கல்வி வலையங்கள் சம்பந்தமாக புதிய அலகுகள் அவசியமாயிருந்தன.குறிப்பாக படுவான்கரை போன்ற பிற்படுத்தப்பட்ட பிரதேசங்களும் நகரை அண்டிய வளர்ச்சியடைந்த பிரதேசங்களும் இணைந்து காணப்பட்ட கல்வி வலையங்களில் மாற்றம் அவசியமாயிருந்தது.அதாவது பிற்படுத்தப்பட்ட பிரதேச பாடசாலைகளின் தராதரங்களை பிரித்தறிந்து  அதற்கேற்ற திட்டமிடலை மேற்கொள்ள முடியாத நிலை இருந்தது. எனவே அவசியமான இரண்டு புதிய கல்வி வலையங்கள் முதல்வரால் உருவாக்கப்பட்டன.வவுணதீவு கல்வி வலையம் திட்டமிடப்பட்டபோது 'அது முஸ்லிம்கள் வாழாத தனித் தமிழ் பிரதேசம் இப்படி இனரீதியில் வலய உருவாக்கங்கள் நல்லதல்ல' என்று எதிர்க்குரல் அவரது அமைச்சரைவையில் ஒரு பழுத்த அரசியல்வாதியால் முன்வைக்கப்பட்டது. அப்போது 'அது உங்கள் பார்வையில் இருக்கின்றது. எனது பிரச்சனை அதுவல்ல யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அதிகமாக கொண்ட பிரதேசம் என்பதே எனது பார்வை அதற்காகவே இந்த  முன்னுரிமை' என்று நச்சென்று பதிலளித்து அவரது வாயை மூடவைத்தார் முதல்வர். 

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் இருந்து  27 பாடசாலைகளும் , பட்டிருப்பு கல்வி வலயத்தில் இருந்து  18 பாடசாலைகளும் , மட்டக்களப்பு மத்தி வலயத்தில் இருந்து  11 பாடசாலைகளையும் கல்குடா கல்வி வலயத்தில் இருந்து  7 பாடசாலைகளையும் இணைத்து 63 பாடசாலைகள் உள்ளடக்கிய வகையில் புதிய கல்வி வலையமான  "வவுணதீவு வலையம்" உருவாக்கப்பட்டது..அதேபோன்று அக்கரைப்பற்று கல்வி வலையத்திலிருந்து பிரித்து திருக்கோவில் பிரதேசத்தை கருத்தில் கொண்டு புதியதொரு கல்வி வலையமும் உருவாக்கப்பட்டது.. இப்புதிய வலயங்களினை உருவாக்கியமை  பிற்படுத்தப்பட்ட  பிரதேசங்களின் கல்வி வரலாற்றில் பெரும் பாய்ச்சலாகும்.

நூலகங்கள் மற்றும் கலாசார மைய மண்டபங்கள்

கல்வி வளர்ச்சி என்பது பாடசாலை கல்வியை மட்டும் அடிப்படையாக கொண்டிருக்க கூடாது என்னும்நோக்கில் வாசிப்பு திறனை ஊக்குவிக்கும் முகமாக பல நூல் நிலையங்களை ஆரம்பிக்கும் திட்டத்தினை முதலமைச்சர் உருவாக்கினார். மட்டக்களப்பு நகரின் மத்தியில் இலங்கையிலேயே மிக பெரியதான ஒரு நூல் நிலையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் நிர்மாணத்துக்காக  22 கோடி ரூபாய்கள்  ஒதுக்கப்பட்டன. வேலைகள் பூர்த்தியாக முன்னர் முன்னதாகவே கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதன் காரணமாக இந்த பிரமாண்டமான நூலக பணிகள் பூர்த்தியாக முடியவில்லை. ஆனாலும் அரசியல் காழ்ப்புணர்வுகளை கடந்த  தேசப்பற்றுமிக்க ஒரு அரசியல் வாதியின்றி  நீண்டகாலமாக  இந்த நூலகத்தின் இறுதிக்கட்ட பணிகள்  காத்துக்கிடந்தன. மீண்டும் தற்போது முன்னாள் முதல்வர் கடந்த இரண்டு வருடங்களில் வகித்த இராஜாங்க அமைச்சர் பதவியை கொண்டு மேலும் 40 கோடி ரூபாய்களுடன் அதனைப் பூரணமாக்கும் நிலைக்கு கொண்டுவந்துள்ளார்.

அடுத்து பேத்தாளை பொது நூலகம் மட்டக்களப்பில் உள்ள நூலகங்கள் அனைத்தையும் விட பெரியதாக அமைக்கப்பட்டது. கிழக்கு பல்கலைகழக மாணவர்களின் நன்மை கருதி அமைக்கப்பட்ட நூலகத்தில்  18 ஆயிரத்துக்கு மேற்பட்ட புத்தகங்கள், 03 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட பௌதிக வளம்  என்பன காணப்படுகின்றன.இணையதள வசதிகளுடன் காணப்படும் இந்த நூலகம் மாணவர்களின் அறிவு வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

போரில் சிக்குண்டு கலை கலாசாரங்கள் நலிவுற்று  மகிழ்ச்சியான வாழ்வைத்தொலைத்து நின்ற மக்களுக்கு தமது அன்றாட விழாக்களைக் கொண்டாடிமகிழ வாய்ப்பளிக்கும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை,கிரான்,ஆரையம்பதி  போன்ற மூன்று பிரதான இடங்களில் கலாசார மைய மண்டபங்கள் உருவாக்கப்பட்டு அவற்றுக்கு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின்  உருவாக்கத்தின் போது உயிர் நீத்த மூன்று மாவீரர்களின் பெயர்கள் சூட்டப்பட்டன.

இறுதியாக 2008ஆம் ஆண்டு தொடக்கம் 20012 ஆம் ஆண்டு வரையான சந்திரகாந்தனின் ஆட்சிக்காலத்தில் கிழக்கு மாகாணசபையால் நடைமுறைப்படுத்தப்பட்ட மேற்படி கல்வித்துறை சார்ந்த அபிவிருத்திகளின் பலனை கிழக்கு மாகாண மாணவர் சமுதாயம் தற்போது முதல் அனுபவிக்க தொடங்கியுள்ளன.கடந்த சில ஆண்டுகளாக  இடம்பெற்ற க.பொ.த. சாதாரண தர/உயர்தர பரீட்சை பெறு பேறுகளில் பல பாடசாலைகளின் வரலாற்றில் முதல் தடவையாக உயர்தரத்துக்கும்,பல்கலைகழகத்துக்கும் நுழையும் வண்ணம் தமது மாணவர்களை வெற்றியீட்ட செய்துள்ளன. அவற்றில் பல பிற்படுத்தப்பட்ட எல்லை கிராமங்க பாடசாலைகள் என்பது மாபெரும் சாதனையாகும். இந்தச் சாதனைகளுக்கு அத்திவாரம் இட்டது வேறு யாருமல்ல. முன்னாள் முதல்வர் பிள்ளையானேயாகும்.

சுமார் எழுபது  வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மண்ணுக்கு   நல்லையா மாஸ்டர் என்னும் பெருமகன் ஆற்றிய கல்விப்பணிக்கு பின்னர் மட்டக்களப்பின் கல்வித்துறையை மேம்படுத்தியவர்கள் அரசியல்வாதிகளின் வரிசையில்  சந்திரகாந்தனின் பெயரை தவிர்த்து யாதொரு வரலாறும் எழுதப்படமுடியாது.

கல்வித்துறையில் இத்தகையதொரு மாபெரும்  பாய்ச்சலை நோக்கி கிழக்கு மாகாணத்தை வழிநடத்துவதற்கும் உத்வேகம் கொண்டு செயல்படுவதற்கும் சிவ.சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் மாபெரும் அரசியல் மேதையாக  காலடி எடுத்து வைத்தவரல்ல.

காமராஜரைப் போலவே ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து,காமராஜரைப்போலவே  விடுதலைக்காகப் புறப்பட்ட காரணத்தினால் இளமையில் கல்வியை தொலைத்து நின்று, காமராஜரைப் போலவே அரசியல் பணிகளில் செயற்திறன் மிக்க  கர்மவீரராக பரிணமித்து, காமராஜரைப்போலவே முதலமைச்சராக இருந்த காலத்தில் கல்விக்காக  ஓப்பற்ற பணிகளை ஆற்றியவர். அதனால்தான் இவரை 'ஈழத்துக் காமராஜர்' எனப் புகழுரைப்பது ஒன்றும் மிகையல்ல.

»»  (மேலும்)

1/05/2024

மீண்டும் புதியதாய்

நீண்டகாலமாக இயங்காதிருந்த உண்மைகள் இணையத்தளம் புத்தாண்டிலிருந்து மீண்டும் புதியதாய் பிறக்கின்றது.  அரசியல், இலக்கிய மற்றும் சமூக அசைவியக்கத்துக்கான தகவல்களுடன் நாளாந்தம் உங்களுடன்.....  

»»  (மேலும்)

3/01/2023

அகில இலங்கை சிறைச்சாலைகளுக்கு இடையிலான மல்யுத்த போட்டியில் மட்டக்களப்பு முதல் இடம்

மட்டக்களப்பு மாவட்டம் முதலிடம்

அகில இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களங்களுக்கிடையிலான 
2022 ஆம் ஆண்டிற்குரிய மல்யுத்த சுற்றுப் போட்டியானது இம்முறை பொலன்னறுவை றோயல் கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில் கடந்த 25/02/2023 சனிக்கிழமை அன்று நடைபெற்றது.

இதற்கு பிரதம அதிதிகளாக சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர் கொடித்துவக்கு அவர்களும் பொலன்னறுவை சிறைச்சாலை அதிகாரி, மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரி ந.பிரபாகரன் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர். 

இதில் மட்டக்களப்பு சிறைச்சாலை தங்கம் 09 வெள்ளி 02 மற்றும் வெண்கலம் 04 பதக்கங்களை பெற்று மல்யுத்த சம்பியன் எனும் பட்டத்தை பெற்றதோடு அகில இலங்கை சிறைச்சாலைகளுக்கிடையில் முதலாம் இடத்தையும் பெற்றது. மற்றும் யாழ்ப்பாண சிறைச்சாலை இரண்டாம் இடத்தையும் பொலனறுவை சிறைச்சாலை மூன்றாம் இடத்தையும் பெற்றன.

சிறந்த மல்யுத்த வீரருக்கான விருதையும் மட்டக்களப்பு சிறைச்சாலையே தட்டிச்சென்றமை குறிப்பிடத்தக்கது 

இதுகுறித்து சிறைச்சாலை அத்தியட்சகர் கருத்து தெரிவிக்கையில்:-

 இனி வரும் காலங்களிலும் தான் இங்கு இருக்கும் வரை மட்டக்களப்பு சிறைச்சாலை முதலிடத்தை பெறும் அதற்காக பூரண ஒத்துழைப்பை வழங்க நான் தயார் எனவும் தெரிவித்தார்.

மேலும் மட்டக்களப்பு மாவட்டம் குறித்து நோக்குகையில் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு பயிற்சி வழங்கிய பயிற்றுவிப்பாளர் திரு திருச்செல்வம் என்பவர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு என்று இல்லாமல் இலங்கைக்கே கிடைத்த அரிய பொக்கிசம் என்றே கூறக் கூடிய அளவு திறமை மிக்கவரும் நேர்மையானவரும் ஆவார் இவரின் அபார திறமையினாலேயே இன்று மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் சிறைச்சாலை என்பன மல்யுத்தம் என்றால் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது இவரின் பயிற்றுவிப்பினால் மட்டக்களப்பு சிறைச்சாலையை சேர்ந்த சிவபாலன் எனும் உத்தியோகத்தர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மற்றுமொரு இளைஞனும் மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக அகில இலங்கை திறந்த தேசிய போட்டியில் பங்கு பற்றி இலங்கை தேசிய அணிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது 

இனிவரும் காலங்களிலும் மட்டக்களப்பு மாவட்டம் மென்மேலும் வெற்றி பெறும் என தனக்கு நம்பிக்கை இருப்பதாக குறித்த பயிற்றுவிப்பாளர் திருச்செல்வம் அவர்கள் செய்திகளுக்கு தெரிவித்தார்.

தமிழன் நவா
»»  (மேலும்)

2/07/2023

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு தொகுதி வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்

கட்சியின் மட்டக்களப்பு தொகுதிக்குரிய உள்ளூராட்சி சபைத் தேர்தல் - 2023 க்கான கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு 2023.02.05 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நேற்றைய தினம் பிற்பகல் 03.00 மணியளவில் மட்/கல்லடி பாலத்திற்கருகாமையில்  இடம்பெற்றது.

மக்கள் வெள்ளம் அலையலையாக திரண்ட தருணத்தில் மக்களின் அமோக வரவேற்போடு மிகவும் வெற்றிகரமாக இந்நிகழ்வுகள் இடம்பெற்றன. 
»»  (மேலும்)

1/12/2023

மீண்டும் ஒரு ஈஸ்டர்? எச்சரிக்கிறது அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாசபை

இலங்­கையில் மீண்டும் ஐ.எஸ். அடிப்­ப­டை­வா­தத்தைப் பரப்பும் வகை­யி­லான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. இது தொடர்­பான இலத்­தி­ர­னியல் சஞ்­சிகை ‘குராஸான் குரல்’ (Voice of Khurasan) சமூக வலைத்­த­லங்­களில் வைர­லாக்­கப்­பட்டு வரு­கி­றது. இது தொடர்பில் விரை­வாக உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு வேண்­டிக்­கொள்­கிறோம் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை பொலிஸ்மா அதி­பரைக் கோரி­யுள்­ளது.

Voice of Khurasan எனும் இலத்­தி­ர­னியல் சஞ்­சி­கையின் பிடிஎப் பிர­தி­யொன்றும் பொலிஸ்மா அதி­ப­ருக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் குறிப்­பிட்ட ஆபத்­தான நிலைமை தொடர்பில் விரி­வாக விசா­ரணை நடாத்தி குறிப்­பிட்ட இலத்­தி­ர­னியல் சஞ்­சி­கையை வெளி­யிட்­ட­வர்கள், மற்றும் விநி­யோ­கிப்­ப­வர்கள், சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை இனங்­கண்டு உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறும் உலமா சபை பொலிஸ்மா அதி­ப­ரைக் ­கோ­ரி­யுள்­ளது.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் இளைஞர் விவ­கார பிரிவின் இணைப்­பாளர் அஷ்ஷெய்க் நுஸ்ரத் நவுபல் பொலிஸ்மா அதி­ப­ருக்கு கடி­த­மொன்­றினை அனுப்பி வைத்­துள்ளார். கடி­தத்தின் பிர­திகள் கொழும்பு குற்­ற­வியல் விசா­ர­ணைப்­பி­ரி­வுக்கும் பயங்­க­ர­வாத விசா­ரணைப் பிரி­வி­ன­ருக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.
இதே வேளை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி மற்றும் செய­லாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் ஆகியோர் கையொப்­ப­மிட்டு உல­மாக்­க­ளுக்கும் மஸ்ஜித் நிர்­வா­கி­க­ளுக்கும் மற்றும் சமூக தலை­வர்­க­ளுக்கும் வேண்­டு­கோ­ளொன்­றி­னையும் முன்­வைத்­துள்­ளனர்.

குறிப்­பிட்ட வேண்­டு­கோளில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது; சமீப காலத்தில் ஆங்­கில மொழியில் இஸ்­லாத்­துக்கு முர­ணான தீவி­ர­வாத மற்றும் பயங்­க­ர­வாத சிந்­த­னை­களை வரவேற்கக் கூடி­ய­தா­கவும் அதனை மேற்­கொண்­ட­வர்­களை புக­ழக்­கூ­டிய விதத்­திலும் ஓர் சஞ்­சிகை (இலத்­தி­ர­னியல்) பரவி வரு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது.சில தீய சக்­திகள் இத­னைப்­ப­ரப்பி இஸ்­லாத்­தையும் முஸ்­லிம்­க­ளையும் கொச்­சைப்­ப­டுத்­து­வ­தற்கும், முஸ்­லிம்­களும், இஸ்­லாமும் இலங்­கைக்கு எதி­ரா­ன­வர்கள் என சித்­த­ரிக்­கவும் முயற்­சிக்­கி­றார்கள். இது தொடர்பில் பொலிஸ் மா அதி­ப­ருக்கு முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.
இவ்­வா­றான கால­கட்­டத்தில் எமது சமூ­கத்தையும் நாட்­டையும் பாது­காப்­பது எமது கட­மை­யாகும்.அதனால் இந்த நாட்டில் எமது முன்­னோர்கள் முஸ்ஸிம் சமூ­கத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு மேற்­கொண்ட பங்­க­ளிப்­புகள் போன்று இன்றும் நாம் பங்­க­ளிப்­பு­களை மேற்­கொள்ள வேண்டும்.

இஸ்­லாத்­துக்கு முர­ணான இஸ்­லாத்தின் பெயரில் பகி­ரப்­படும் கருத்­துக்­க­ளி­லி­ருந்து அனை­வரும் மிக ஜாக்­கி­ர­தை­யா­கவும், ஒற்­று­மை­யா­கவும் செயற்­பட்டு நாட்­டுக்கும் மனித சமு­தா­யத்­துக்கும், இஸ்­லாத்­துக்கும் பங்­க­ளிப்பு செய்­யக்­கூ­டிய ஒரு சமூ­கத்தை கட்­டி­யெ­ழுப்ப உதவி புரி­யு­மாறு அன்­புடன் வேண்­டிக்­கொள்­கிறோம் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் செய­லாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூரா­மித்­திடம் விடி­வெள்ளி வின­வி­யது. அவர் பின்­வ­ரு­மாறு தெரி­வித்தார். ‘2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் இடம் பெறு­வ­தற்கு முன்பு அடிப்­ப­டை­வாதம் தொடர்பில் உலமா சபை உளவுத்துறைக்கும் பாதுகாப்பு பிரிவினருக்கும் அறிவித்தது.ஆனால் பாதுகாப்பு பிரிவினரால் இத்தாக்குதலை நிறுத்த முடியாதுபோனது.

இம்முறையும் ஐ.எஸ்.தீவிரவாதம் தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளோம். இதன் பின்னணியில் உள்ளவர்களை இனங்கண்டு சட்டத்தின்முன் நிறுத்த வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் பொறுப்பாகும் என்றார்.- Vidivelli

»»  (மேலும்)

12/26/2022

வாழும்போதே வாழ்த்துவோம்" சாமஸ்ரீ சமூக சேவையாளர் விருது விழா!

மட்டக்களப்பில் இடம்பெற்ற "வாழும்போதே வாழ்த்துவோம்" சாமஸ்ரீ சமூக சேவையாளர் விருது விழா!

அகில இன நல்லுறவு ஒன்றியம் நடாத்தும் சாமஸ்ரீ சமூக சேவையாளர் விருது விழா "வாழும்போதே வாழ்த்துவோம்" எனும் தொனிப்பொருளில் 24 திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு ஊறணி தனியார்  கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் போது கல்வி, கலை, கலாசார, வர்த்தக, சமூக நலத்துறைகளில் தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட புத்தி ஜீவிகளுக்கும், சாதனையாளர்களுக்குமான சாமஸ்ரீ சமூக சேவையாளர் விருது  வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அகில இன நல்லுறவு ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர்  கலாபூசணம்  யு.எல்.எம். ஹனிபா  தலைமையில்  இடம்பெற்ற நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான கே.கருணாகரன் பிரதம  அதிதியாக கலந்து கொண்டு பல்துறை சாதனையாளர்களுக்கான விருதினை வழங்கி கௌரவித்தார்.

மேலும் இந்நிகழ்விற்கு கெளரவ அதிதிகளாக கலாநிநி   பொன்.நல்லரெத்தினம், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி  வைத்தியர் இ.உதயகுமார் மற்றும் அக்கரைப்பற்று தொழில்நுட்ப கல்லூரியின் அதிபர் மா.சோமசூரியம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் சிறப்பு அதிதிகளாக காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்தியர் எம்.எஸ்.எம்.ஜாபிர்  மற்றும் அக்கரைப்பற்று  பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர்  கலாநிதி எஸ்.எம்.சதாத், அகில இலங்கை நல்லுறவு ஒன்றியத்தின் மட்டக்களப்பு மாவட்டத்துக்குரிய இணைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.

இதன்போது பல்துறைசார் சாதனையாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து "சாமஸ்ரீ தேச மானிய" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், பிரதம அதிதி உள்ளிட்ட அதிதிகளுக்கும் இதன்போது நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விருது வழங்கும் விழாவில் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் திரு. நல்லையா பிரபாகரன் அவர்களுக்கும் "சாமஶ்ரீ தேசமானி: எனும் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழன் நவா 
»»  (மேலும்)

12/24/2022

தந்தை பெரியார் வரலாற்று குறிப்புகள்--சிறு அறிமுகம்

தந்தை பெரியார்

1879
ஈ.வே.ராமசாமி (தந்தை பெரியார்) தமிழ் நாட்டிலுள்ள ஈரோடு   மாவட்டத்தில்  1879ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 17ஆம் திகதி பிறந்தார்                     .

1889
தனது பாடசாலை கல்வியை 1889ஆம் ஆண்டு பத்தாவது வயதில் நிறுத்தினார். அதனால் அவரை பெற்றோர்  வியாபாரத்தில் ஈடுபடுத்தினர்.

1898 
தனது 19ஆவது வயதில் நாகம்மாள் என்பவரை திருமணம் செய்தார். இரு வருடங்களின் பின்  அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.அக்குழந்தை ஐந்தாவது வயதில் இறந்தது.அதன்பின்னர் அவர்களுக்கு குழந்தைகள் கிடையாது.

1904
தனது 25வது வயதில் துறவறம் பூண்டு காசி, கல்கத்தா போன்ற இடங்களுக்கு சென்றார். பின்னர் அவரை அவரது தந்தை அதிலிருந்து மீட்டெடுத்தார்.

1911
பெரியாரின் தந்தை மரணமானார்.

1914
ஈரோடு நகரமன்றத்தின் தவிசாளரானார். அத்தோடு ஈரோடு நகரத்தின் கெளரவ மஜிஸ்ட்டேட் உட்பட்ட 28 கெளரவ பதவிகளை வகித்தார்.

1919
நகர மன்ற தவிசாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.

1920
அனைத்துவித கெளரவ பதவிகளையும் துறந்து இந்திய தேசிய காங்கிரஸ் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்தார்.

1921
தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரானார்.

1922
மதுவிலக்கு (கள்ளுக்கடை மறியல்)  போராட்டத்தில் ஈடுபட்டதனால் சிறைபிடிக்கப்பட்டார். அவரோடு  மனைவி நாகம்மாள், தங்கை கண்ணம்மாள் ஆகியோரும் சிறைபிடிக்கப்பட்டனர்.

1922
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தெரிவானார். பெரியாரது ஈரோடு இல்லம் தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பின் அலுவலகமாக மாறியது.

1924
இந்தியாவில் முதல் முறையாக சத்தியாக்கிரகம் நடத்தினார். கேரளத்தில் வைக்கம் மகாதேவர் ஆலயம் முன்பாக தீண்டாமை ஒழிப்புக்காக அது நடாத்தப்பட்டது.
அதனால்  இருமுறை சிறை சென்றார்.
அப்போராட்டத்தில் வெற்றி பெற்றதனால் வைக்கம் வீரர் என்னும் சிறப்பு பட்டம் பெற்றார்.

1925
சமுதாயத்திலுள்ள சாதி வேறுபாடுகளை களைய சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தார்.  அதனை பிரச்சாரம் செய்ய குடியரசு வார இதழை தொடங்கினார். 

1927
சாதி முறைமைகளை ஆராதிக்கும் "வர்ணாச்சிரமம் தர்மத்தை " ஒழித்தால்த்தான் தீண்டாமைக்கொடுமைகள் ஒழியும் என்று  காந்தியோடு கடுமையான வாதம் புரிந்தார்.

1928 
புரட்சி என்னும் அர்த்தம் கொண்ட "ரிவோல்ட்" என்னும் ஆங்கில இதழை தொடங்கினார்.

1929
முதலாவது சுயமரியாதை மாநாட்டை செங்கல்பட்டில் கூட்டினார். இந்த மாநாட்டில் அண்ணாத்துரை ஒரு மாணவனாக கலந்து கொண்டார். 

1929
பெரியார் மலேசியா சென்று சுயமரியாதை பிரச்சாரம் செய்தார். 

1930
ஈரோட்டில் இரண்டாவது சுயமரியாதை மாநாட்டை கூட்டினார்.

1931
விருது நகரில் மூன்றாவது சுயமரியாதை மாநாட்டை கூட்டினார்.

1932 
இலங்கை, எகிப்து,ரஸ்யா,கிரீஸ்,துருக்கி,ஜெர்மனி,ஸ்பெயின், பிரான்ஸ்,போத்துக்கல்,இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு சென்று திரும்பினார். லண்டனில் 50.000 தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.

1933
மனைவி நாகம்மை இறந்தார்.

1934
"பகுத்தறிவு" நாளிதழை தொடங்கினார்.

1935
நீதிக்கட்சிக்கு ஆதரவளிக்க தொடங்கினார்.

1936 
பெரியாரின் தாயார் சின்னத்தாயம்மாள் மறைந்தார்.

1937
"கட்டாய  ஹிந்தி மொழி" எதிர்ப்பு மாநாட்டை காஞ்சிபுரத்தில் நடத்தினார்.

1938
சென்னையில் கூடிய தமிழ் நாடு பெண்கள் மாநாடு  "பெரியார்"  என்னும் சிறப்பு பட்டத்தை வழங்கி கெளரவித்தது.

ஹிந்தி திணிப்பை எதிர்த்து மாபெரும் கிளர்ச்சி செய்தமையால் இரண்டு வருட சிறைவாசம் செல்ல நேர்ந்தது. 
ஆந்திர பிரதேசத்தில் அவர் சிறையிருக்கும் போதே நீதிக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

1940
டாக்ட்ர் அம்பேத்காரை பம்பாய் சென்று சந்தித்து உரையாடினார்.

1944
பெரியார் தலைமையிலான நீதி கட்சி "திராவிடர் கழகம்"என்னும் பெயர் மாற்றம் பெற்றது. 

1949
பெரியார் மணியம்மையை மணந்தார்.

அண்ணாத்துரை அவரது ஆதரவாளர்களுடன் இணைந்து பெரியார் தலைமையிலான திராவிடக்கழகத்திலிருந்து விலகி திராவிட முன்னேற்ற கழகம் என்னும் அமைப்பை உருவாக்கினார்.

1950
பெரியார் அவருடைய "பொன்மொழிகள்" நூலுக்காக ஆறு மாதகால சிறைத்தண்டனை பெற்றார்.

1951
பிற்படுத்தப்பட்டடோர் நலனுக்காக கிளர்ச்சி செய்து இந்தியாவின் அரசியல் அமைப்பினை முதல் முறையாக திருத்தச் செய்தார்.

1954
இந்திய தேசிய காங்கிரஸ்  சார்பில்  தமிழ் நாட்டில் காமராஜர் முதல்வராவதை ஆதரித்தார்.

1967
திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் அண்ணாத்துரை முதலமைச்சரானதும் பெரியாரிடம் நேரில் சென்று சந்தித்து ஆசிகளும் வாழ்த்துரையும் ஆலோசனைகளும் பெற்றுக்கொண்டார்.

1968
வட  இந்தியாவில் உள்ள லக்னோ மாநகரில் நடைபெற்ற சிறுபான்மையோர் மாநாட்டில் சிறப்புரையாற்றினார்.

1970
சர்வதேச அமைப்பான யுனெஸ்கோ பெரியாருக்கு விருது வழங்கி கெளரவித்தது.
( "பெரியார் நவீன காலத்தின் தீர்க்கதரிசி,தென்கிழக்காசியாவின் சோக்ரடீஸ்,சமூகசீர்திருத்தத்தின் தந்தை,
அறியாமை,மூடநம்பிக்கை,அர்த்தமற்ற சம்பிரதாயம், மானமிழந்த  பழக்கவழக்கங்கள் என்பவற்றில் கடும் எதிரி"-யுனெஸ்கோ)

1973
சென்னையில் தனது இறுதி சொற்பொழிவையாற்றினார்.

மாபெரும் சிந்தனையாளர் பெரியார் டிசம்பர்-24ஆம் நாள் தனது 95 வது வயதில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

அப்போதைய முதல்வர் கருணாநிதியின் விசேட ஆணைப்படி பெரியாரது பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டு அரச மரியாதைகள் வழங்கப்பட்டடன.

1974
தமிழ் நாடு அரசால் வாங்கப்பட்ட.கப்பலுக்கு "தமிழ் பெரியார்" என்னும் பெயர் சூட்டப்பட்டு    பெரியார் கெளரவிக்கப்பட்டார்.

1975
ஈரோட்டில் பெரியார் வாழ்ந்த இல்லம் அரசுடமையாக்கப்பட்டு பெரியார்-அண்ணா நினைவாலயமாக்கப்பட்டது.

1978
முதலமைச்சர் எம்ஜிஆர் ஆட்சியில் பெரியார் நூற்றாண்டு விழா தமிழ் நாடு முழுக்க மிகச்  சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்திய மத்திய அரசாங்கம் பெரியாரின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது  சிறப்பு முத்திரை ஒன்றை வெளியிட்டது.

பெரியாருடைய தமிழ் எழுத்து சீர்திருத்தத்தினை  எம்ஜிஆர் தலைமையிலான  தமிழ் நாடு அரசு அமுலாக்கியது.

1980
தமிழ் நாடு சட்டடசபை மண்டபத்தில் தந்தை பெரியாரின் உருவச்சிலை நிறுவப்பட்டது.

1984
தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவினால் வருடாந்த பெரியார் விருது ஒன்று உருவாக்கப்பட்டு  தமிழக அரசினால் சமூகநீதி போராளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

பிரசுர வெளியீடு *பெரியார் வாசகர் வட்டம் மட்டக்களப்பு

»»  (மேலும்)

12/22/2022

தமிழ் தேசிய அரசியல்- தேவையில்லாத ஆணிகள்

ஹோம் சைனா’ (சீனா வீட்டுக்குப் போ) என்ற போராட்டத்தை, தான் தலைமையேற்று நடத்தவேண்டி வரும் எனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சாணக்கிய ராகுல், பாராளுமன்றத்தில் சூளுரைத்திருக்கிறார். 

தமிழ்த் தேசிய அரசியலின் முன்னிலைக் கட்சிகளில் ஒன்றான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, இன்று ‘மாலுமி இல்லாத கப்பலாக’, கடலில் அலையின் போக்குக்கு ஏற்ப, தன்பாட்டுக்கு மிதந்துகொண்டு நிற்கிறது. ஆளாளுக்கு தனக்குப் பிடித்த திசையில் கப்பலைச் செலுத்த, துடுப்புப் போடும் நிலையில், திக்குத் தெரியாது, கரை தெரியாது, நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது கட்சியும் தமிழ்த் தேசியமும்!

கிட்டத்தட்ட 20 டிரில்லியன் டொலர் பொருளாதாரம் கொண்ட சீனாவுக்கு, இலங்கை 7.4 பில்லியன் டொலர் கடனை செலுத்த வேண்டியுள்ளது என்றும், இலங்கையின் உண்மையான நண்பனாக சீனா இருந்தால், இலங்கையின் கடனை தள்ளுபடி செய்ய அல்லது குறைந்தபட்சம் மறுகட்டமைப்பு செய்ய ஒப்புக்கொள்ளும் என்றும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி சாணக்கிய ராகுல், வெள்ளிக்கிழமை (02) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

மேலும், கிட்டத்தட்ட 20,000 பில்லியன் டொலரை வைத்திருக்கும் சீனா, உண்மையிலேயே இலங்கையின் நண்பன் என்றால்..., 9 மில்லியன் லீற்றர் டீசல் அல்லது அரை மில்லியன் கிலோ கிராம் அரிசி வழங்குவது, உண்மையான உதவியல்ல என்றும் சிங்களத்தில் பேசிய சாணக்கிய ராகுல் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், “சீனர்கள் இந்த நாட்டில் என்ன செய்தார்கள்? ஹம்பாந்தோட்டை துறைமுகத்தைப் பார்த்தால், சீனா அதைக் கைப்பற்றியுள்ளது. இலங்கை மக்களுக்கு வேலை கொடுக்கப்பதற்காக இந்த நாட்டில், சீனர்கள் செய்த முதலீடு ஒன்றைச் சொல்லுங்கள். ஒரு தொழில் கூட இல்லை” என்றும் சாணக்கிய ராகுல் கூறினார். 

மேலும், “ராஜபக்‌ஷ குடும்பத்துக்கு நன்றி செலுத்துவதற்காக, அவர்கள் இந்த நாட்டில் முதலீடுகளை கட்டாயப்படுத்தியுள்ளனர். அவை பயனற்ற முதலீடுகள்” என்றும் குறிப்பிட்டார்.

இந்தப் பேச்சு, இலங்கை என்ற நாட்டுக்கோ, அல்லது தமிழ்த் தேசிய அரசியலுக்கோ பிரயோசனமில்லாத பேச்சு. சீனா, இலங்கைக்கு என்ன செய்தது என்ற கேள்வியை சாணக்கிய ராகுல் கேட்க முதல், அவர் கொஞ்சம் வரலாற்றைப் படிக்க வேண்டும். 

மஹிந்த ராஜபக்‌ஷ காலம் வரை, சீன-இலங்கை உறவு எப்படி இருந்தது என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். பிரபல்யம் தேடுவதற்காக, சமூக ஊடகங்களின் பரவல் மூலம், பிரபல்யம் கிடைக்கும் என்பதற்காக, எதையும் பேசலாம் என்பதற்குப் பெயர் ‘அரசியல்’ அல்ல. அத்தகைய அரசியலை முன்னெடுப்பது, ஒரு சமூகத்துக்கு மிகமிக ஆபத்தானது.

1950களில், இலங்கை அந்நிய செலாவணி பற்றாக்குறையின் விளைவாக, பொருளாதார நெருக்கடி நிலையை சந்தித்திருந்தது. அதன் விளைவாக, அரிசி இறக்குமதி குறைந்ததில் நாட்டில் அரசிக்கான பற்றாக்குறை நிலவியது. 

கொரியப் போர் முடிவுக்கு வந்ததன் விளைவாகவும், செயற்கை இறப்பரின் அறிமுகத்தாலும் உலக சந்தையில் இறப்பருக்கான தேவை கணிசமாகக் குறைந்தது. 

உலகளாவிய நெருக்கடிகள் காரணமாக, தேயிலை மற்றும் தேங்காய் எண்ணெய் போன்ற இலங்கை ஏற்றுமதி செய்த பொருட்களுக்கான தேவையும் குறைந்தது. ஆகவே, எமது அந்நியச் செலாவணி வரவு குறைந்தது. ஆனால், அரிசிக்கு இறக்குமதியில்தான் நாம் தங்கியிருந்தோம். ஆகவே, நமது அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து கொண்டே வந்தது. எனவே, 1952 ஒரு மிகச் சவாலான காலமாக இருந்தது. 

இந்த நிலையில்தான், சீனாவுக்கு இறப்பரின் தேவை அதிகமாக இருந்தது. தடைகள் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக, சீனாவால் இலகுவாக இறப்பரை பெற்றுக்கொள்ள முடியாத சூழல் இருந்தது. இலங்கைக்கு அரிசி தேவையானதாக இருந்தது. இந்த நிலையில்தான், அன்றைய வர்த்த அமைச்சர் றிச்சட் கோட்டாபய சேனநாயக்கவின் முயற்சியால், 1952இல், ‘சீனா-சிலோன் அரிசி - இறப்பர் ஒப்பந்தம்’ கைச்சாத்தானது. 

இந்த ஒப்பந்தத்தின்படி, சீனாவுக்கு இறப்பரை ஏற்றுமதி செய்தோம்; அதற்குப் பதில், சீனா எங்களுக்கு அரிசியைக் கொடுத்தது. அதுவும் சும்மா அல்ல; சீனா மிகவும் தாராளமாக இலங்கை இறப்பருக்கான சந்தை விலையை விட 40% அதிகமாகவும், அரிசிக்கான சந்தை விலையில் 1/3 பங்கையும் இலங்கைக்கு வழங்கியது. இலங்கைக்கு மிகப்பெரிய அனுகூலமான ஒப்பந்தம் இது! 

இதனால் ஏனைய சில நாடுகள், இலங்கைக்கான உதவிகளை நிறுத்தியிருந்தாலும், இதனால் இலங்கைக்கு கிடைத்த அனுகூலம் பெரியதுதான். இந்த ஒப்பந்த, இலங்கையும் சீனாவும் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக்கொண்ட 1957இற்கு ஐந்து வருடங்களுக்கு முன்பதாகவே கைச்சாத்திடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

1976இல் சீனா, இலங்கைக்கு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தைப் பரிசளித்திருந்தது. அன்றைய காலத்தில், தென் மற்றும் தென் கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய மாநாட்டு மண்டபமாக இது இருந்தது. இந்த மண்டபத்தில்தான் 1976இல் இலங்கை அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டை நடத்தியிருந்தது! இதைவிட சிறுநீரக வைத்தியசாலை, தேசிய வைத்தியசாலை வௌிநோயாளர் பிரிவு என சீனா செய்யும் உதவிகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆகவே, இலங்கைக்கான எதிரி நாடல்ல சீனா என்பதைப் புரிந்துகொள்ளுதல்தான் அரசியல் பக்குவம். 

இலங்கையின் நெருங்கிய நண்பன் இந்தியா என்பதில், மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இலங்கை தனது வரலாற்றில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது, இலங்கைக்கு ஏறத்தாழ நான்கு பில்லியன் டொலர் வரை கடனுதவி செய்தது இந்தியா. 

இதற்காக சீனாவை மோசமான எதிரியாகச் சித்திரிக்கத் தேவையில்லை. இந்தியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் இலங்கைக்கு செய்த, செய்கின்ற உதவிகளுக்கு நிகராக, ஏனைய பல செல்வந்த நாடுகள் உதவவில்லை. அதற்காக, அவர்களை வைது கொண்டிருக்க முடியுமா என்ன?

மறுபுறத்தில், இந்தக் கருத்தைச் சொன்னவர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என்பதால், இலங்கை அரசியல் என்பதற்கப்பால், தமிழ்த் தேசிய அரசியலுக்கு, சீன எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய தேவை என்ன என்ற கேள்வியும் இங்கு முக்கியமானது. 

சீனா, வௌிநாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை என்பதை, தனது வௌிநாட்டுக் கொள்கையாகக் கொண்டிருக்கிறது. அதன்படி, இலங்கையின் இனப்பிரச்சினை பற்றி அது பேசுவதில்லை. ஆனால், யுத்தகாலத்தில் இலங்கைக்கு அது நிறைய ஆயுத, மற்றும் பாதுகாப்பு உதவிகளை வழங்கியிருக்கிறது. ஆனால், சீனா மட்டும்தான் ஆயுத, மற்றும் இராணுவ உதவிகளை வழங்கியதா என்பதையும் நாம் கருத்திற்கொள்ள வேண்டும். 

இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, இஸ்‌ரேல், ரஷ்யா என 30 வருடகால உள்நாட்டு யுத்தத்தில், இலங்கைக்கு பல நாடுகளும் இராணுவ உதவிகளைச் செய்துள்ளன. 

சீன எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய எந்தத் தேவையும், தமிழ்த் தேசிய அரசியலுக்குக் கிடையாது. இவ்வளவும் ஏன், இலங்கை அரசியலுக்கே, சீன எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய தேவை கிடையாது. சமகாலப் பேச்சு வழக்கில் சொல்வதானால், இது ‘தேவையே இல்லாத ஆணி’.

குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் சீனா பற்றிய கருத்து, அறவே தேவையற்றதொரு கருத்து! சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்பதுபோலத்தான், தமிழ்த் தேசிய அரசியலின் நிலை இன்று மாறிக்கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது. 

‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்’ என்றார் வள்ளுவர். ஆனால், தமிழ்த் தேசியமானது, பார்வையாளர்களைக் கண்டதும் கிளர்ச்சியுறும் குரங்கின் கையில் பூமாலையாக, சிக்கிச் சீரழிந்து வருகிறது என்றால் அது மிகையல்ல. 

தமிழ் மக்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்! ஒருவன் எந்த மொழியில் பேசுகிறான் என்பதைவிட, என்னத்தைப் பேசுகிறான் என்பதில்தான் விடயம் இருக்கிறது.

அடிமுட்டாள்தனமான கருத்தை ஆங்கிலத்திலோ, ஃபிரஞ்சிலோ, லத்தீனிலோ, ஹிந்தியிலோ, சிங்களத்திலோ பேசினாலும், அது அடிமுட்டாள்தனமான கருத்துதான்! இந்தத் தேவையில்லாத ஆணிகளைப் பிடுங்குவதை, தமிழ்த் தேசிய அரசியல் நிறுத்திக்கொள்வது அதன் ஆரோக்கியத்துக்குச் சாலச்சிறந்தது.

என்.கே.அஷோக்பரன்
நன்றி தமிழ் மிரர்

»»  (மேலும்)

வீதி மறியல் போராட்டத்தில் மாணவர்கள்- விரைந்து சென்ற பிள்ளையான்

மட்/கதிரவெளி விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தில் காணப்படும் ஆசிரியர் குறைபாடுகளை நீக்கக்கோரி வீதிக்கு இறங்கிய  மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். 

இப்பாடசாலையில் இருந்து  குறித்த ஒரு  காலப்பகுதிக்குள் எவ்வித பதிலீடுகளும் இல்லாமல் பதினேழு ஆசிரியர்கள் இடமாற்றப்பட்டுள்ளனர். இதுகுறித்து  கல்குடா கல்விவலைய பணிப்பாளரிடம் பலமுறை முறையிட்டும் பலனளிக்காத நிலையில் அப்பாடசாலை   மாணவர்கள் இணைந்து இன்று வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இதையறிந்து அவ்விடத்துக்கு உடனடியாக விரைந்த பாராளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தன் அவர்கள்  மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் உரையாடி குறைகளை அறிந்து கொண்டார். அவ்விடத்திலிருந்தே மாகாண கல்விப்பணிப்பாளர் மற்றும் கல்வியமைச்சின் செயலாளர் ஆகியோருடன் தொடர்புகொண்டு பேசியதையடுத்து ஒரு வாரகாலத்துக்குள் குறித்த இடமாற்றம் பற்றிய பிரச்னைக்கு முடிவினைப் பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்தார்.

»»  (மேலும்)

12/20/2022

'விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயற்சி' - 9 பேரை கைது செய்த என்.ஐ.ஏ

போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாகவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயற்சி செய்ததாகவும் திருச்சி சிறப்பு முகாமில் இருந்த 8 இலங்கையர்கள் உட்பட ஒன்பது பேரை இந்தியாவின் தேசியப் புலனாய்வு முகமை கைதுசெய்துள்ளது. ltte

சி. குணசேகரன் என்ற குணாவும், புஷ்பராஜா என்ற பூக்குட்டி கண்ணாவும் சேர்ந்து போதைப் பொருள் கும்பல் ஒன்றை நடத்திவந்ததாக என்.ஐ.ஏ தெரிவிக்கிறது.

இவர்களுக்கான போதைப் பொருளை, பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஹாஜி சலீம் என்பவர் அனுப்பிவந்துள்ளார். இந்த போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கும்பல், இந்தியாவிலும் இலங்கையிலும் செயல்பட்டதாகவும் இரு நாடுகளிலும் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயன்றதாகவும் என்.ஐ.ஏ. தெரிவிக்கிறது.

இது தொடர்பான ஒரு வழக்கை கடந்த ஜூலை 8ஆம் தேதியன்று தாமாக முன்வந்து என்.ஐ.ஏ. பதிவுசெய்தது.

இது தொடர்பாக என்ஐஏவின் டி.ஐ.ஜி. காளிராஜ் மகேஷ்குமார் தலைமையிலான அணி ஒன்று  திருச்சி சிறப்பு முகாமில், கடந்த ஜூலை 20ஆம் தேதி சோதனைகளை நடத்தியது.

இந்த சோதனைகளின்போது, மொபைல் போன்கள், சிம் கார்டுகள், ஹார்ட் டிஸ்க்கள், பென் டிரைவ்கள், லேப்டாப் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

இதற்குப் பிறகு நேற்று, திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த சி. குணசேகரன், புஷ்பராஜா, முகமது அஸ்மின், அழகப்பெரும சுனில் காமினி பொன்செக, ஸ்டான்லி கென்னடி ஃபெர்ணான்டோ, லாடியா சந்திரசேன, தனுக்க ரோஷன், வெள்ளசுரங்க்க, திலீபன் ஆகிய ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

»»  (மேலும்)